சிக்கிம் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் அரசு
தலைமையிடம்கேங்டாக்
செயற்குழு
ஆளுநர்லக்ஷ்மண் ஆச்சார்யா
முதலமைச்சர்பிரேம் சிங் தமாங்
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • சட்டமன்றம்
மேலவைஇல்லை
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சிக்கிம் உயர் நீதிமன்றம்

சிக்கிம் அரசு, இந்திய மாநிலமான சிக்கிமின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை கேங்டாக்கில் உள்ளன. அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். மாநிலத்தின் நீதித்துறைக்கு தலைமை வகிப்பது உயர்நீதிமன்றமாகும். இதன் கீழ் கீழ்நிலை நீதிமன்றங்களும் இயங்குகின்றன.[1]

தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 32 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.

சான்றுகள்[தொகு]

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_அரசு&oldid=3749197" இலிருந்து மீள்விக்கப்பட்டது