வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைA place to learn; A chance to grow
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்1984
வேந்தர்கோ. விஸ்வநாதன்
துணை வேந்தர்Dr. D. P. Kothari
நிருவாகப் பணியாளர்
1410 (ஆசிரியர்கள்=655)
மாணவர்கள்12242 (ஆ=8895;பெ=3347)
அமைவிடம், ,
வளாகம்புறநகர், 250 ஏக்கர் (1 கிமீ²)
இணையதளம்http://www.vit.ac.in

வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அல்லது வி.ஐ.டி பல்கலைக்கழகம் (VIT University) தமிழ் நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொறியியல் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்து, அதன் வேந்தராகவும் இருந்து வருபவர் ஜி.விசுவநாதன் ஆவார். 1984ல் பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 2000 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது, பின்னர் 2001 இல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்வு கண்டது. செப்டம்பர் 2006ல் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(Vellore Institute of Technology) என்று பெயர் மாற்றப்பட்டது.[1] வேலூரில் மட்டுமல்லாமல் சென்னை, அமராவதி, போபால் ஆகிய நகரங்களிலும் இதன் வளாகங்களுள்ளன.

வரலாறு[தொகு]

வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 1984 இல் வேலூர் இன்ஜீனியரிங் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர், 2001 இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதும் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றானது. அதன் பின்னர், 2006 இல் யுனிவர்சிடி கிரென்ஸ் கமிஷெனின் படி வி.ஐ.டி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் அடைந்தது.[1] 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இப்பல்கலைக்கழகம் இந்தியா டுடே பத்திரிக்கையால் நடத்தப்பட்ட இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற கருத்து கணிப்பில் 20வது இடம் பெற்றது.[2]

பாடப்பிரிவுகள்[தொகு]

இப்பல்கலைக்கழகத்தில் 18 இளங்கலை பாடப்பிரிவுகளும், 32 முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளன.அது மட்டுமன்றி ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகளும் உள்ளன. இங்கு சுமார் 12,250 மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 8 கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. விளையாட்டு, கல்வி, கலை என அனைத்துத் துறைகளிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

ரிவேரா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரிவேரா என்ற பெயரில் நான்கு நாள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்குபெறப் பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். ரிவேராவின் போது எண்ணற்ற விளையாட்டு, நடனம், பாட்டு, எழுத்து, இசை மற்றும் புதிர்ப் போட்டிகள் நடைபெறும். 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சிவம் துபே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.[3]

கல்லூரி கட்டிட அமைப்பு, வசதிகள்[தொகு]

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இவை தவிர, மாணவர்களுக்கென 13 விடுதிகளும், மாணவிகளுக்கென 4 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து விடுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீச்சல் குள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இதைத் தவிர, ஆண்டுதோறும் பல வழிகளில் மாணவர்களின் நன்மைக்காகப் பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக நிகழ்வுகள்[தொகு]

பல்வேறு அமைப்புகளுடை இணைந்து இந்நிறுவனம் சமூக நிகழ்வுகளை நடத்திவருகிறது. இந்து தமிழ் திசை நிறுவனத்துடன் இணைந்து இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி எனும் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வை நடத்தியது.[4] இதன் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் மூலம் தூய தமிழ்ப் பயிலரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[5][6]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "VIT BTech admissions".
  2. "கல்லூரிகள் தரவரிசை". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
  3. "“ஒருவேளை கிரிக்கெட் வீரராக முடியவில்லை என்றால்... ஹீரோவாகிருப்பேன்” - கிரிகெட் வீரர் சிவம் துபே". புதியதலைமுறை. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/cricketer-shivam-dube-speech-in-cultural-fest-riviera-at-vellore. பார்த்த நாள்: 25 May 2024. 
  4. "விஐடி பல்கலைக்கழகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி’ அறிவியல் திருவிழா: வேலூர் விஐடி வளாகத்தில் நாளை நடைபெறுகிறது". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/brandhub/events/1195403-science-festival.html. பார்த்த நாள்: 25 May 2024. 
  5. "மாணவர்கள் வரலாற்றை படிக்க வேண்டும்". மாலைமலர். https://www.maalaimalar.com/news/district/vellore-news-students-should-study-history-680954. பார்த்த நாள்: 25 May 2024. 
  6. "தூய தமிழ்ப் பயிலரங்கம்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2024/Apr/10/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81. பார்த்த நாள்: 25 May 2024.