உள்ளடக்கத்துக்குச் செல்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல தமிழ் சொற்கள் காலப்போக்கில் வழக்கொழிந்து போயுள்ளன. சில சொற்கள், அது பயன்பாட்டில் வந்த காலத்தில் இருந்த பொருளுக்கும், அதன் இன்றைய பொருளுக்கும் வேறுபட்டுள்ளது. இதற்கான காரணங்கள் வேறுபட்டவை.

வழக்கொழிந்த சொற்கள்[தொகு]

  • உஞற்றல் [1]- செய்தல் எனும் பொருளில் இது பயன்பாட்டில் இல்லை[சான்று தேவை]
  • மடி [1] - சோம்பல் எனும் பொருளில் இது பயன்பாட்டில் இல்லை

(குமரி மாவட்டத்தில் பேச்சுவழக்கில் இச்சொல் உள்ளது)

பொருள் மாறிய சொற்கள்[தொகு]

  • கிழவன்/கிழவி[2] - இக்காலத்தில் இதன் பொருள் வயதான ஆண் பெண்ணைக்குறிக்கிறது. சங்க காலத்தில் பொதுவான ஆண்/பெண்ணைக் குறிக்கவே இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. 1.0 1.1 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.
  2. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.