வலைவாசல்:பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



தொகு  

பெண்ணியம் வலைவாசல்


பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு. சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.

பெண்ணியம் பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒரு பெண்கள் அமைப்பு. இது பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக போராடி வரும் அமைப்பு.



தொகு  

பெண்ணிய எழுத்தாளர்கள்


தஸ்லிமா நசுரீன்
தஸ்லிமா நசுரீன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.



தொகு  

பெண்ணியப் போராளிகள்


உ. வாசுகி
உ. வாசுகி இந்திய பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினர் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயற்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்மகளிர் சிந்தனை என்ற சிற்றிதழின் ஆசிரியருமாவார்.



தொகு  

பெண்ணியம் குறித்த பகுப்புகள்


தொகு  

சாதனைப் பெண்கள்


கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003) இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.




தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?



தொகு  

சிறப்புப் படம்


காமினி ராய்
காமினி ராய்
பட விளக்கம்:

காமினி ராய் (அக்டோபர் 12, 1864செப்டம்பர் 27, 1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார். பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். காமினி ராய், 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார்.

தொகு  

அண்மைய நிகழ்வுகள்


உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. (தினமணி, 5 நவம்பர் 2014)
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


Things you can do

  • பெண்ணியம் தொடர்பான விக்கித் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • பெண்ணியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • பெண்ணியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • பெண்ணியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • பெண்ணியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:பெண்ணியம்&oldid=1749639" இலிருந்து மீள்விக்கப்பட்டது