வலைவாசல்:தமிழீழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



தொகு  

தமிழீழ வலைவாசல்


தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்.

தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.

தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினுடைய நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.

தமிழீழம் பற்றி மேலும் அறிய...
தொகு  

சிறப்புக் கட்டுரை


புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சிறார்கள், கனடாவில் நடந்த ஒரு விழாவில்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொணர்ந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்கள், பண்பாடு மற்றும் மொழி அடிப்படையிலாக ஒரே ரீதியாகவிருந்த போதும், சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் அவர்களை யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், மன்னார் தமிழர், திருகோணமலை தமிழர், மட்டக்களப்புத் தமிழர், வடமேற்குத் தமிழர், கொழும்புத் தமிழர், வடமத்தியத் தமிழர் என பிரிக்கலாம்.
தொகு  

இதே மாதத்தில்


பிரேமதாசா

தொகு  

செய்திகளில் தமிழீழம்


விக்கிசெய்திகளில் தமிழீழ வலைவாசல்
தொகு  

தமிழீழ நபர்கள்


காசி ஆனந்தன் (இயற்பெயர்: சிவானந்தன்) ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து காவலர்களால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர். பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வெ. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் சிறீலங்காவிலுள்ள ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இவருக்கு தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • தமிழீழம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|தமிழீழம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தமிழீழம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தமிழீழம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தமிழீழம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

சிறப்புப் படம்


ஹம் காமாட்சி அம்மன் ஆலயம்
ஹம் காமாட்சி அம்மன் ஆலயம்
படிம உதவி: User:Stahlkocher

இலங்கை இனப்பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் பரவலாக உலகம் முழுவதும் இந்து கோவில்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவைகளில் யேர்மனியில் அமையப்பெற்ற ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஐரோப்பாவில் உள்ள இந்துக் கோயில்களில் இரண்டாவது பெரிய கோயிலாகக் கருதப்படுகின்றது.

தொகு  

தமிழீழம் தொடர்பானவை



தொகு  

பகுப்புகள்


தமிழீழ பகுப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ்நாடு தமிழ் வரலாறு இலங்கை தமிழர்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழீழம்&oldid=2440602" இலிருந்து மீள்விக்கப்பட்டது