வணங்காமுடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணங்காமுடி
தயாரிப்புபி. புல்லையா
கதைகதை ஏ. கே. வேலன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
நாகைய்யா
எம். கே. ராதா
தங்கவேலு
நம்பியார்
சாவித்திரி
பி. கண்ணாம்பா
ராஜசுலோச்சனா
எம். சரோஜா
ஹெலன்
கலையகம்நெப்டியூன், அடையார்
வெளியீடுஏப்ரல் 12, 1957
நீளம்17430 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வணங்காமுடி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிக, நடிகையர்[தொகு]

நடிகர்கள்[2]

நடிகைகள்[2]

இவர்களுடன் எம். ஆர். சந்தானம், நாட் அண்ணாஜிராவ், தங்கப்பன், ஜெமினி பாலு ஆகியோரும் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள்[தொகு]

வணங்காமுடி திரைப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார், பாடல்களை தஞ்சை இராமையாதாஸ் எழுதியிருந்தார்.[1][2][3]

இல. பாடல் பாடியோர் இயற்றியவர் நீளம்
1 "ராஜயோகமே பாரீர்" பி. சுசீலா தஞ்சை இராமையாதாஸ் 02:51
2 "மலையே உன் நிலையே பாராய்" சீர்காழி கோவிந்தராஜன் 03:00
3 "பாட்டும் பரதமும்" டி. எம். சௌந்தரராஜன் 02:48
4 "என்னைப் போல் பெண்ணல்லவோ" பி. சுசீலா 03:06
5 "வா வா வளர்மதியே வா" எம். எல். வசந்தகுமாரி 04:23
6 "கட்டழகு மாமா" பி. லீலா 04:06
7 "மோகனப் புன்னகை" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:20
8 "ஆட்சியின் திமிராலே" சீர்காழி கோவிந்தராஜன் 03:14
9 "கூத்து கும்மாங்கு கொய்யாப்பழம் போல" ஜிக்கி குழுவினர் 03:18
10 "வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா" ஏ. எம். ராஜா, பி. சுசீலா 03:04
11 "ஈரைந்து மாதமே இடை நோக" டி. எம். சௌந்தரராஜன் 02:03
12 எஸ். சி. கிருஷ்ணன் & டி. வி. ரத்தினம்

ஆசியாவின் பெரிய கட்-அவுட்[தொகு]

தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 80 அடி உயரமுள்ள அந்த கட்-அவுட் சித்ரா தியேட்டரில் அப்போது வைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் என்று அது பற்றி கூறப்பட்டது. இதனை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருந்தனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ராண்டார் கை (6 ஆகஸ்ட் 2011). "Vanangamudi 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/vanangamudi-1957/article2330545.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016. 
  2. 2.0 2.1 2.2 2.3 வணங்காமுடி பாட்டுப் புத்தகம். சரவணபவ & யுனிட்டி பிக்சர்சு. 1957.
  3. Mani, Charulatha (9 December 2011). "A Raga's Journey — Soulful Suddhadhanyasi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 31 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170731075453/http://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-soulful-suddhadhanyasi/article2701250.ece. 
  4. "Disappearing trades: Chennai, once a city of hoardings". The Hindu. 11 செப்டம்பர் 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/chennai-once-a-city-of-hoardings/article6395165.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணங்காமுடி_(திரைப்படம்)&oldid=3959144" இலிருந்து மீள்விக்கப்பட்டது