ருத்தேனியம் ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருத்தேனியம் ஐம்புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருத்தேனியம்(V) புளோரைடு
இனங்காட்டிகள்
14521-18-7
பண்புகள்
F5Ru
தோற்றம் பச்சைநிறத் திண்மம்
அடர்த்தி 3.82 கி/செ.மீ3
உருகுநிலை 86.5 °C (187.7 °F; 359.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ருத்தேனியம் ஐம்புளோரைடு (Ruthenium pentafluoride) என்பது RuF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆவியாகக்கூடிய திண்மமான இசேர்மம் பச்சை நிறத்துடன் அரிதாகக் காணப்படுகிறது. ருத்தேனியம் மற்றும் புளோரின் ஆகிய இரு தனிமங்கள் மட்டும் இணைந்து உருவாகும் இரட்டைப் புளோரைடு வகைச் சேர்மத்திற்கு இதுவொரு எடுத்துக்காட்டாகும். நீராற்பகுத்தல் வினைகளால் இச்சேர்மம் எளிதாகத் தூண்டப்படுகிறது. பிளாட்டினம் ஐம்புளோரைடு போன்ற Ru4F20 நாற்படியாலான சமகட்டமைப்புடைய கட்டமைப்பை ருத்தேனியம் ஐம்புளோரைடும் பெற்றுள்ளது. நாற்படிகளுக்குள் உள்ள ஒவ்வொரு ருத்தேனியமும் எண்முக மூலக்கூற்று வடிவத்துடன் இரண்டு புளோரைடு ஈந்தணைவிப் பாலங்களுடன் அமைந்துள்ளன[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. J. H. Holloway, R. D. Peacock, R. W. H. Small "The crystal structure of ruthenium pentafluoride" J. Chem. Soc., 1964, 644-648. எஆசு:10.1039/JR9640000644