உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு
The 2023 Nobel Prize in Physiology or Medicine
கரிக்கோ (இடது) மற்றும் வைசுமேன் (வலது) "கோவிட்-19 க்கு எதிராக பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான இவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக"
தேதி2 அக்டோபர் 2023 (2023-10-02)
Locationஸ்டாக்ஹோம்
நாடுசுவீடன்
வழங்குபவர்கரோலின்சுகா நிறுவன நோபல் பேரவை
தொகுத்து வழங்கினார்தாமசு பெர்ல்மேன்
வெகுமதி(கள்)11 மில்லியன் சுவீடிய குரோனா (2023)[1]
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்2023 Nobel Prize in Physiology or Medicine

உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, 2023 (2023 Nobel Prize in Physiology or Medicine) கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவும் நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கதலின் கரிக்கோ(பிறப்பு 1955) மற்றும் துரூ வைச்சுமேன் (பிறப்பு 1959) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[2]

பரிசு பெற்றவர்கள்[தொகு]

கதலின் கரிக்கோ[தொகு]

கதலின் கரிக்கோ சனவரி 17, 1955 அன்று அங்கேரியின் சோல்னோக்கில் பிறந்தார்.[3] சஜெட் பல்கலைக்கழகத்தில் கரிக்கோ உயிர்வேதியியலில் 1982ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[4] 2013 முதல் 2022 வரை, இவர் பயோஎண்டெக் ஆர்.என்.ஏ. மருந்துகள் நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருந்தார். இந்நிறுவனத்தில், முதலில் துணைத் தலைவராகவும், 2019-ல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். இந்த நிறுவனம் உலக அளவில் தூதாறனை தடுப்பூசிகளை வணிகமயமாக்கியது.

துரூ வைசுமேன்[தொகு]

துரூ வைசுமேன் செப்டம்பர் 7, 1959-ல் மாசசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டனில் பிறந்தார் 1987ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தினைப் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

முக்கிய வெளியீடுகள்[தொகு]

கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை கரிக்கோ மற்றும் வைசுமேன் ஆகியோருக்கு 2023 பரிசை வழங்குவதற்கு பின்வரும் ஆய்வு வெளியீடுகள் அடிப்படை காரணங்களாகும்.[5]

  • Karikó, K., Buckstein, M., Ni, H. and Weissman, D. Suppression of RNA Recognition by Toll-like Receptors: The impact of nucleoside modification and the evolutionary origin of RNA. Immunity 23, 165–175 (2005).
  • Karikó, K., Muramatsu, H., Welsh, F.A., Ludwig, J., Kato, H., Akira, S. and Weissman, D. Incorporation of pseudouridine into mRNA yields superior nonimmunogenic vector with increased translational capacity and biological stability. Mol Ther 16, 1833–1840 (2008).
  • Anderson, B.R., Muramatsu, H., Nallagatla, S.R., Bevilacqua, P.C., Sansing, L.H., Weissman, D. and Karikó, K. Incorporation of pseudouridine into mRNA enhances translation by diminishing PKR activation. Nucleic Acids Res. 38, 5884–5892 (2010).

மேற்கோள்கள்[தொகு]

  1. Burger, Ludwig; Pollard, Niklas (2 October 2023). "Nobel Prize for Medicine goes to Kariko and Weissman, pioneers of COVID vaccine". Reuters.com. https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/kariko-weissman-win-medicine-nobel-covid-19-vaccine-work-2023-10-02/. 
  2. . 2023-10-02. 
  3. "Scientists behind mRNA COVID Vaccines Win 2023 Nobel Prize in Physiology or Medicine". பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
  4. Hargittai, Istvan; Hargittai, Magdolna (25 May 2021). "Our science and the Covid-19 pandemic—Katalin Karikó's research idea and her perseverance". Structural Chemistry 32 (4): 1353–1356. doi:10.1007/s11224-021-01797-9. பப்மெட்:34054260. 
  5. Press release: The Nobel Prize in Physiology or Medicine 2023 nobelprize.org

வெளி இணைப்புகள்[தொகு]