போரிசு வசீலியேவிச் நியுமெரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரிசு வசீலியேவிச் நியுமெரோவ்
பிறப்புவெலிக்கி நோவ்கோரோத் நகரம்
இறப்பு1941
ஓரியல்
படித்த இடங்கள்
  • Faculty of Physics and Mathematics of the Saint Petersburg University
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்
  • செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மாநில பல்கலைக்கழகம்

போரிசு வசீலியேவிச் நியூமரோவ் (Boris Vasilyevich Numerov) (உருசியம்: Борис Васильевич Нумеров; ஜனவரிi 29, 1891—செப்டம்பர் 13, 1941) ஓர் உருசிய வானியலாளரும் நில அளக்கையியலாளரும் புவி இயற்பியலாளரும் ஆவார். இவர் நவகோரதில் பிறந்தார். இவர் 1913 இல் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் பல வானியல், கனிமவியல் கருவிகளை உருவாக்கியுள்ளார். இவரது பெயரில் கணினி நெறிநிரல்களும் அறிவியல் முறைகளும் வழங்குகின்றன. இவர் அறிவியல் கல்விக்கழக உறுப்பின்ர்; 1913 முதல்1915 வரை புல்கோவோ வான்காணக நோக்கீட்டாளர்; புனித பீட்டர்சுபர்கு அரசு பல்கலைக்கழகத்தில் 1915 முதல் 1925 வரை அதன் வான்காணக வானியலாளர். மேலும் இவர் புவி இயற்பியல் மையத்தின் காணக இயக்குநராக 1926 முதல் 1927 வரை இருந்துள்ளார். அதோடு 1924 முதல் 1937 வரை இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.[1] இவர் இலெனின்கிராதில் உள்ள வானியல் நிறுவனத்தை நிறுவி, அதன் இயக்குந்ரகவும் இருந்தார்.[2]

இவர்1936 இல் விண்மீன்களின் ஆய்வில் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் உள்ள தன் ஆய்வகத்தில் பயன்படுத்த, வாலசு எக்கர்ட் ஆய்வகத்துக்குச் சென்று அவரது துளையிட்ட அட்டை எந்திரத்தைப் பார்வையிட்டார்.[3]

இவர் 1936 இல் சிறைபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடும் உழைப்புத் தண்டனை வழங்கப்பட்டார் (இது புல்கோவோ ஒறுப்புகளில் அடங்கும். இதில் பல வானியலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்).[4] இவர் மீது செருமானியச் சம்பளத்தில் ஒற்றராகப் பணிபுரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்குச் சான்றாக செருமானிய வானியலாளர் குறுங்கோள் 1206 நியுமெரோவியாவுக்கு இவரது நினைவாகப் பெயர் இட்டது கருதப்பட்டுள்ளது.[1] இவர் மற்ற ஆசியல் கைதிகளுடன்1941 செப்டம்பரில் ஓரியோல் சிறையில் மாஸ்கோ செருமனிவசம் வீழ்வதற்கு முன்பு தூக்கில் இடப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் பின்னர் 1957 இல் இவரது நினைவேந்தல் புத்துயிர்ப்பிக்கப்பட்டது.[5]

இவரது நினைவாக, நிலாவின் நியூமெரோவ் குழிப்பள்ளமும் 1931 இல் ஐடல்பர்கில் செருமானிய வானியலாளர் கண்டுபிடித்த சிறுகோள் 1206 நியூமெரோவியாவும் பெயர் இடப்பட்டுள்ளன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Sookahet, Gérard (29 April 2006). La Méthode de Numerov (PDF).
  2. 2.0 2.1 Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (1206) Numerowia. Springer Berlin Heidelberg. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-29925-7. பார்க்கப்பட்ட நாள் November 2015. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  3. When computers were human பரணிடப்பட்டது 2012-02-24 at the வந்தவழி இயந்திரம் (an incorrect date of 1938 for this visit is given in the following timeline: Computing at Columbia Timeline)
  4. Russian Wiki
  5. Computing at Columbia Timeline

வெளி இணைப்புகள்[தொகு]

  • Gérard Sookahet, La Méthode de Numerov pour Résoudre les Equations Différentielles du 2nd Ordre, PDF