பித்ரு பட்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பித்ரு பட்சம்
செப்டம்பர் 7, 2007 அன்று மும்பையில் பித்ரு பட்ச சடங்குகள் நடத்தப்படுதல்
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைஇந்து
அனுசரிப்புகள்சிரார்த்தம்: இறந்த முன்னோர்களை, குறிப்பாக உணவு படைத்து வழிபடும் இந்துக்கள் சடங்காகும்
தொடக்கம்ஆவணி/புரட்டாசி (பாத்திரபத) மாத முழுநிலவன்று
முடிவுஅடுத்த அமாவாசை அன்று
நாள்செப்டம்பர்/அக்டோபர்
2023 இல் நாள்செப்டம்பர் 14
2024 இல் நாள்date missing (please add)
தொடர்புடையனநீத்தார் வழிபாடு

பித்ரு பட்சம் (Pitru Paksha, சமக்கிருதம்: पितृ पक्ष), அல்லது பித்ர் பக்ஷம் அல்லது பித்ரி பக்க்ஷா, (வடமொழியில் "முன்னோர்களின் பதினாறு நாட்கள்" எனப் பொருள்படும்) இந்த 16–சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது.[1][2][3]

இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு சடங்குகள் நிகழ்த்தப்படுவதால் மற்ற பணிகளுக்கு நல்ல நாட்களாகக் கருதப்படுவதில்லை. இந்நாட்களில் மங்கல நிகழ்வுகளான திருமணம் போன்றவை கொண்டாடப்படுவதில்லை. மேலும் புதிய வணிக முயற்சிகளைத் துவக்குதல், வீடு/வாகனங்கள் வாங்குதல் ஆகியனவும் தவிர்க்கப்படுகின்றன. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Usha (2008). "Mahalaya". Festivals In Indian Society. Vol. 2. Mittal Publications. pp. 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-113-7.
  2. Underhill, M M (2001). The Hindu religious year. Asian Educational Services. pp. 112–116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0523-7.
  3. Vidyarathi, L P. The Sacred Complex in Hindu Gaya. Concept Publishing Company. pp. 13, 15, 33, 81, 110.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்ரு_பட்சம்&oldid=3805804" இலிருந்து மீள்விக்கப்பட்டது