ந. நல்லுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந. நல்லுசாமி (N. Nallusamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஓசலூரில் பிறந்தவர். 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி-II தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்று தமிழக அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.[1] இவர் காவேரி மகளிர் கல்லூரி மற்றும் காவேரி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் நிறுவனரும் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. R Kannan, ed. (28 June 2017). MGR A Life. Random House Publishers India Pvt. Limited. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789386495884. {{cite book}}: line feed character in |title= at position 4 (help)
  2. லேனா தமிழ்வாணன், ed. (1987). தமிழக மாவட்ட நூல் வரிசை : திருச்சிராப்பள்ளி மாவட்டம். மணிமேகலைப் பிரசுரம். p. 170. நல்லுசாமி குளித்தலையை அடுத்த ஓசலூரில் பிறந்தவர் தமிழக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சராகப் பொறுப்பில் இருந்தவர் .திருச்சி காவேரி பெண்கள் கல்லூரியைத் தொடங்கியதும் இவரே. இனிய பண்பாளர் .
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._நல்லுசாமி&oldid=3943864" இலிருந்து மீள்விக்கப்பட்டது