நியாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியாசி (Niazi) அல்லது நியாசாய் என்பது பாக்கித்தானில் வசிக்கும் பஞ்சாபி பழங்குடியினரில் ஒன்றாகும்.[1][2]

தோற்றம்[தொகு]

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் பஞ்சாப் பிரபு கான் சகான் லோடியின் ஆதரவின் கீழ் நைமத்துல்லா என்பவர் எழுதிய மக்சானி-இ-நியாசி (கி.பி. 1610) என்ற நூல் நியாசிகளின் தோற்றம் பற்றிய விவரங்களை வழங்குகிறது.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

  • அப்துல் மனன் நியாசி, முன்னாள் தாலிபான் தளபதி
  • அப்துல் சத்தார் கான் நியாசி, பாக்கித்தான் அரசியல்வாதி மற்றும் மத பிரமுகர்.
  • அமீர் அப்துல்லா கான் நியாசி, பாக்கித்தான் இராணுவத் தளபதி.
  • அமீர் அப்துல்லா கான் ரோக்ரி, பாக்கித்தான் அரசியல்வாதி மற்றும் ஆர்வலர்.
  • அத்தாவுல்லா கான் எசகெல்வி, பாக்கித்தான் நாட்டுப்புற பாடகர் மற்றும் அரசியல்வாதி.
  • பசல் நியாசாய், ஆப்கானித்தானின் துடுப்பட்ட வீரர்.
  • கோலாம் முகமது நியாசி, ஆப்கானிய அரசியல்வாதி மற்றும் மத பிரமுகர்.
  • குலாம் அக்பர் கான் நியாசி, பாக்கித்தானில் பிறந்த சவுதி அரேபிய மருத்துவர்.
  • குலாம் அசரத் நியாசி, ஆப்கானித்தான் கால்பந்து வீரர்.
  • குல் அமீது கான் ரோக்ரி, பாக்கித்தான் அரசியல்வாதி.
  • ஐபத் கான் நியாசி, சேர் சா சூரியின் மூத்த இராணுவத் தளபதி.
  • உமர் கவாத் கான் ரோக்ரி, பாக்கித்தான் அரசியல்வாதி.
  • இம்ரான் அகசன் கான் நியாசி, பாக்கித்தான் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்.
  • பாக்கித்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நியாசி.[3]
  • ஈசா கான் நியாசி, ஆப்கானிய பிரபு.
  • கராமத் ரகுமான் நியாசி, பாக்கித்தான் கடற்படைத் தளபதி.
  • கௌசர் நியாசி, பாக்கித்தான் அரசியல்வாதி மற்றும் மதத் தலைவர்.
  • மிஸ்பா-உல்-ஹக், பாக்கித்தானின் துடுப்பாட்ட வீரர்.
  • முகம்மது அம்சத் கான் நியாசி, பாக்கித்தான் கடற்படைத் தளபதி.
  • முகம்மது அயாசு நியாசி, ஆப்கானிய இசுலாமிய அறிஞர், கதீப் மற்றும் இமாம்.
  • முனீர் நியாசி, பாக்கித்தான் கவிஞர்.
  • நகீத் நியாசி, பாக்கித்தானின் முன்னாள் பின்னணிப் பாடகர்.
  • சைபோரா நியாசி, ஆப்கானித்தான் நாடாளுமன்ற உறுப்பினர்.
  • சைபுல்லா நியாசி, பாக்கித்தான் அரசியல்வாதி.
  • சதாப் கான், பாக்கித்தானின் துடுப்பாட்ட வீரர்.
  • சேர் ஆப்கான் நியாசி, பெனசீர் மற்றும் பர்வேசு முசரப் காலத்திலிருந்த பாக்கித்தான் அரசியல்வாதி .
  • சித்ரா நியாசி, பாக்கித்தான் தொலைக்காட்சி நடிகை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Suleman Khanzada (31 August 2018). "Imran Khanam or Imran Niazi?". Daily Times (newspaper). https://dailytimes.com.pk/290559/imran-khan-or-imran-niazi/. 
  2. Saadia Sumbal (28 July 2021). Islam and Religious Change in Pakistan: Sufis and Ulema in 20th Century (Gazetteer of Mianwali District 1915, 24. Punjab). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781000415049. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.
  3. "Imran Khanam or Imran Niazi?". https://dailytimes.com.pk/290559/imran-khan-or-imran-niazi/. Suleman Khanzada (31 August 2018).

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாசி&oldid=3865930" இலிருந்து மீள்விக்கப்பட்டது