நிசாரி இஸ்மாயிலி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாரி இஸ்மாயிலி இராச்சியம்
1090–1273
கொடி of
இடது:1162 வரை கொடி, வலது: 1162 முதல் கொடி
தலைநகரம்அலமுத்து மலைக்கோட்டை அரண்மனை (அசாசின்களின் பாரசீகத் தலைநகரம்
மஸ்யூப் மலைக்கோட்டை அரண்மனை, லெவண்ட் பகுதிகளின் தலைநகரம்
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி [1]
லெவண்ட் பகுதியில் அரபு மொழி)[1]
சமயம்
நிசாரிகள், இஸ்மாயிலி, சியா இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
பிரபு 
• 1090–1124
அசன் ஐ சப்பா
• 1124–1138
கியா புஸ்ருக்-உம்மித்து
• 1138–1162
முகமது இபின் புஸ்ருக்-உம்மித்து
• 1162–1166
இரண்டாம் அசன்
• 1166–1210
இரண்டாம் இமாம் முகமது
• 1210–1221
மூன்றாம் இமாம் அசன்
• 1221–1255
மூன்றாம் இமாம் முகமது
• 1255–1256
இமாம் ருக்-அல்-தின்-குர்ஷா
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• தொடக்கம்
1090
• முடிவு
1273
நாணயம்தினார் & திர்ஹம்[2]
முந்தையது
பின்னையது
சியாரித்து வம்சம்
சல்லாரித்து வம்சம்
ஜஸ்டனித்துகள்
செல்யூக் பேரரசு
செல்யூக் பேரரசு
ஆர்த்துகிட்டு வம்சம்
எகிப்தின் மம்லுக் சுல்தானகம்
மங்கோலியப் பேரரசு
ஈல்கானரசு
தற்போதைய பகுதிகள்ஈரான்
ஈராக்
சிரியா
நிசாரி இஸ்மாயிலி இராச்சியம் is located in Middle East
மஸ்யூப் மலைக்கோட்டை
மஸ்யூப் மலைக்கோட்டை
அலமுத்து மலைக்கோட்டை
அலமுத்து மலைக்கோட்டை
Location of the main centers

நிஜாரி இராச்சியம் அல்லது அலமுத் இராச்சியம் என்பது நிஜாரி இஸ்மாயிலி சியா இசுலாம் அரசாகும். இது கிபி 1090ல் தற்கால ஈரானின் அலமுத் கோட்டையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் ஹசன்-இ சப்பாவால் நிறுவப்பட்டது. கிபி 1090 முதல் கிபி 1273 முடிய இந்த இராச்சியத்தினர் தற்கால ஈரான், ஈராக் மற்றும் சிரியா நாட்ட்ப் பகுதிகளை ஆண்டனர். இவர்கள் இரண்டு தலைநகரங்களைக் கொண்டிருந்தனர். ஒன்று தற்கால வடமேற்கு ஈரானில் உள்ள அலமுத்து மலைக்கோட்டை அரண்மனை. மற்றொருன்று சிரியாவில் உள்ள மஸ்யூப் மலைக்கோட்டை அரண்மனை ஆகும். நிஜாரி இராச்சியத்தினரை வரலாற்றாளர்கள் கொலையாளிகள் என்றழைத்தனர்.[3]

இந்த அரசு பாரசீகம் மற்றும் லெவண்ட் முழுவதிலும் வலுவான கோட்டைகளைக் கொண்டிருந்தது. இந்த இராச்சியத்தின் பிரதேசங்கள் பெரும் பகைமை மற்றும் சிலுவைப் போர்களால் சூழப்பட்டிருந்தது.. இது செல்யூக் பேரசை எதிர்க்கும் மக்களால் ஆதரிக்கப்பட்டது.[4] சிறுபான்மை நிஜாரி (சியா இசுலாம்) பிரிவு மத மற்றும் அரசியல் இயக்கத்தின் விளைவாக உருவாக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் இருந்ததால், நிஜாரிகள் மூலோபாய, தன்னிறைவு கொண்ட கோட்டைகளைப் பயன்படுத்தியதன் மூலமும், வழக்கத்திற்கு மாறான தந்திரங்களைப் பயன்படுத்தியதின் மூலமும் எதிரிகளை எதிர்த்தனர். இவர்கள் முக்கியமான எதிரிகளை படுகொலை செய்தல் மற்றும் உளவியல் போர்த் தந்திரங்களை கையாண்டனர்.. இவர்கள் சமூகத்தின் வலுவான உணர்வையும் தங்கள் தலைவருக்கு முழு கீழ்ப்படிதலையும் கொண்டிருந்தனர்.

தங்களின் விரோதமான சூழலில் உயிர்வாழ்வதில் ஆக்கிரமிக்கப்பட்ட போதிலும், இந்த காலகட்டத்தில் இஸ்மாயிலிகள் ஒரு அதிநவீன பார்வை மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை வளர்த்துக் கொண்டனர்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிசாரி இராச்சியம் உள்நாட்டில் வீழ்ச்சியடைந்தது மற்றும் அதன் தலைமை, மங்கோலியப் படையெடுப்புகளால் முடிவடைந்தது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Daftary, Farhad (2007). The Isma'ilis: Their History and Doctrines (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-46578-6.
  2. Willey, Peter (2005). The Eagle's Nest: Ismaili Castles in Iran and Syria (in ஆங்கிலம்). I. B. Tauris. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850434641.
  3. முஸ்லிம், கிறிஸ்தவர் இரு தரப்புக்கும் மரணத்தை பரிசளித்த நிசாரி இராச்சியத்தினர்
  4. Nizari-Seljuk_conflicts
  5. Virani, Shafique (2003). "The Eagle Returns: Evidence of Continued Isma'ili Activity at Alamut and in the South Caspian Region following the Mongol Conquests" (in en). Journal of the American Oriental Society 123 (2): 351–370. doi:10.2307/3217688. https://www.academia.edu/37219410.