நத்தம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தம் வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நத்தம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டத்தில் நத்தம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,58,687 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 80,037 ஆண்களும், 78,650 பெண்களும் உள்ளனர். 37,470 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 72.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 18,708 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,977 மற்றும் 36 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.41%, இசுலாமியர்கள் 6.8%, கிறித்தவர்கள் 1.37%% & பிறர் 0.41% ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தம்_வட்டம்&oldid=3125241" இலிருந்து மீள்விக்கப்பட்டது