திருவள்ளூர்

ஆள்கூறுகள்: 13°07′23″N 79°54′43″E / 13.123100°N 79.912000°E / 13.123100; 79.912000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளூர்
திருஎவ்வுளூர்
திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீரராகவப்பெருமாள் கோயில்
திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீரராகவப்பெருமாள் கோயில்
அடைபெயர்(கள்): எவ்வுளூர்
திருவள்ளூர் is located in தமிழ் நாடு
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர் (தமிழ்நாடு)
திருவள்ளூர் is located in இந்தியா
திருவள்ளூர்
திருவள்ளூர்
திருவள்ளூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°07′23″N 79°54′43″E / 13.123100°N 79.912000°E / 13.123100; 79.912000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
அரசு
 • வகைமுதல் நிலை நகராட்சி
 • நிர்வாகம்திருவள்ளூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
 • சட்டமன்ற உறுப்பினர்வி. ஜி. ராஜேந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப
பரப்பளவு
 • மொத்தம்33.27 km2 (12.85 sq mi)
ஏற்றம்
72 m (236 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்56,074
 • தரவரிசை31
 • அடர்த்தி1,700/km2 (4,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
602 001-602 003
தொலைபேசி குறியீடு91-44
வாகனப் பதிவுTN-20
சென்னையிலிருந்து தொலைவு40 கி.மீ (25 மைல்)
வேலூரிலிருந்து தொலைவு132 கி.மீ (82 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு343 கி.மீ (213 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு476 கி.மீ (296 மைல்) பொதட்டூர்பேட்டை யிலிருந்து 67 கி.மீ website = Tiruvallur

திருவள்ளூர் (Thiruvallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை நகராட்சியும் ஆகும்.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

திருவள்ளூர் கோவில் மற்றும் குளம், ஆண்டு 1848[2]

இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.[3][4]

உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற இவ்வூர், காலப்போக்கில் மருவி தற்போது திருவள்ளூர் என அழைக்கப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

மதவாரியான கணக்கீடு
மதம்n சதவீதம்(%)
இந்துக்கள்
86.45%
முஸ்லிம்கள்
5.88%
கிறிஸ்தவர்கள்
6.17%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.02%
சைனர்கள்
0.35%
மற்றவை
1.12%
சமயமில்லாதவர்கள்
0.0%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,004 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 56,074 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5627 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 10,653 மற்றும் 334 ஆகவுள்ளனர்.[5]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருவள்ளூரில் இந்துக்கள் 86.45%, முஸ்லிம்கள் 5.88%, கிறிஸ்தவர்கள் 6.17%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.35%, 1.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி. ராஜேந்திரன்
மக்களவை உறுப்பினர் கே. ஜெயக்குமார்

திருவள்ளூர் நகராட்சியானது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை காங்கிரசு கட்சியை சேர்ந்த கே. ஜெயக்குமார் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த வி. ஜி. ராஜேந்திரன் வென்றார்.

போக்குவரத்து[தொகு]

திருவள்ளூர் நகரமானது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூரை இணைக்கும் பிற முக்கிய சாலைகளில் காக்களூர், புட்லூர், சேவப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய நகரங்கள் வழியாக ஒரு பாதையும், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளது. தமிழ்நாட்டின் மிக அதிகமான போக்குவரத்து நிலைகளில், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் (1,00,000) வாகனங்கள் இந்த நகரத்தை கடக்கின்றன.

இந்நகரமானது சென்னை - பெங்களூர் அகல ரயில் பாதையில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு புறநகர் ரயில் பாதைகள் உள்ளன: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரையிலான மேற்கு பாதை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி வரையிலான வடமேற்கு பாதை ஆகியவைகள் ஆகும். இந்த இரண்டு பாதைகளிலும், அதிகளவில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றனர்.

இங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள சென்னை வானூர்தி நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளூர்&oldid=3957585" இலிருந்து மீள்விக்கப்பட்டது