செருவல்லி தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருவல்லி தேவி கோயில்

செருவல்லி தேவி கோயில் (Cheruvally Devi Temple) இந்தியாவின், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், காஞ்சிரப்பள்ளி வட்டத்தில் செருவள்ளி கிராமத்தில் அமைந்துள்ள தேவி கோயிலாகும். தேவி ஆதிசக்தியின் மிகவும் உக்கிரமான வடிவமான பத்ரகாளி தேவி இங்கு மூலவராக உள்ளார். இக்கோயில் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்களில் இக்கோயில் மிகவும் தனித்துவமானது. ஒரு காலத்தில் பழங்குடியினர் வசம் இருந்த இக்கோயில் பின்னர் பல நிலப்பிரபுக்களின் கைகளுக்கு வந்தது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பொன்குன்னம் - மணிமாலா வழித்தடத்தில் கோட்டயத்திற்குத் தென்கிழக்கில் 35 கி.மீ. தொலைவிலும், காஞ்சிரப்பள்ளிக்கு தென்மேற்கில்10 கி.மீ. தொலைவிலும், பொன்குன்னத்திற்குத் தெற்கில் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

குசுமம், செருவல்லி தேவி கோயிலின் யானை

நீதிபதி அம்மாவன்[தொகு]

திருவிதாங்கூர் சர்தார் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் கோவிந்த பிள்ளை சில தவறான புரிதல்களால் ஏற்பட்ட திடீர் ஆத்திரத்தால் தன்னுடைய மருமகனைக் கொன்றார். நியாயமான மனிதராக இருந்ததால், தன்னை தூக்கிலிடுமாறு மகாராஜாவிடம் வேண்டிக்கொண்டார். பின்னர் அவரது ஆன்மா செருவல்லியில் உள்ள அவரது குடும்ப கோயிலில் குடியேறியது. பக்தர்கள் அங்கு வழிபாடு நடத்தி நைவைத்யம் செய்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The legends". cheruvallydevitemple.com. Archived from the original on 17 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருவல்லி_தேவி_கோயில்&oldid=3954754" இலிருந்து மீள்விக்கப்பட்டது