சீனாவில் இயற்கை எரிவாயு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2010–2018 ஆம் ஆண்டு காலத்தில் சீனாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் இறக்குமதியும்

சீனாவில் இயற்கை எரிவாயு (Natural gas in China) நுகர்வு, உற்பத்தி மற்றும் இறக்குமதிகள் 2008-2013 ஆம் ஆண்டு காலத்தில் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்தது. முக்கியத்துவம் மிக்க இவ்வளர்ச்சியானது இக்காலகட்டத்தில் ஈரிலக்க வளர்ச்சி விகிதமாக உயர்ந்தது. [1]

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி சீனாவின் எரிவாயு இருப்பு 184 டிரில்லியன் கன அடிகளாகும். உலகின் மொத்த இயற்கை எரிவாயு இருப்பு 6923 டிரில்லியன் கன அடிகள் என்ற நிலையில் சீனா இயற்கை எரிவாயு இருப்பில் உலகில் 10 வது இடத்தைப் பிடித்துள்ளது.

நுகர்வு[தொகு]

சீனாவின் ஆற்றலுக்கான மகத்தான தேவையை கருத்தில் கொண்டு நோக்கினால் 2012 ஆம் ஆண்டு எரிவாயு அதன் ஆற்றல் பயன்பாட்டில் ஒப்பீட்டளவில் சிறிய பங்கை மட்டுமே கொண்டிருந்தது. அதாவது மொத்த ஆற்றலில் 5% மட்டுமே இருந்தது. [2] இயற்கை எரிவாயு நிலக்கரியை விட குறைந்த மாசுபடுத்தும் எரிபொருளாகவும் குறைவான கார்பன் கொண்ட தீவிர மாற்று எரிபொருளாகவும் சீன அதிகாரிகள் பார்த்தார்கள்.இதன்விளைவாக எரிவாயு நுகர்வு சீனாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் சீன நாட்டின் ஆற்றல் விநியோகத்தில் 15% அளவை இயற்கை எரிவாயு வழங்கும் என்று சீனாவில் எதிர்பார்க்கப்படுகிறது. [3]

பகிர்வு[தொகு]

1980 -2012 ஆம் ஆண்டுகள் காலத்தில் சீனாவில் இயற்கை எரிவாயு உற்பத்தி

உற்பத்தி[தொகு]

2013 ஆம் ஆண்டு மட்டும் சீனா 112 பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்தது. உற்பத்திக்கான உலக தரவரிசையில் இது சீனாவுக்கு ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. 2005-2013 ஆம் ஆண்டு காலத்தில் சீனாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியளவு இரண்டு மடங்கு அதிகரித்தது. [4]

இறக்குமதி[தொகு]

இயற்கை எரிவாயு உற்பத்தி வேகமாக உயர்ந்துள்ள போதிலும், 2013 ஆம் ஆண்டில் சீனா 52 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து உலகின் ஐந்தாவது பெரிய எரிவாயு இறக்குமதியாளராக மாறியது. 2008-2013 காலகட்டத்தில் கூட இறக்குமதி பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. [5] இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஆதாரங்களை பல்வகைப்படுத்த சீனா ஆராய்ந்து வருகிறது.

2013 ஆம் ஆண்டில் சப்பான், கொரியா நாடுகளைத் தொடர்ந்து சீனா உலகின் மூன்றாவது பெரிய நீர்ம இயற்கை எரிவாயு இறக்குமதியாளராக இருந்தது. இந்த இறக்குமதியில் 85% ஆத்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் கத்தார் நாடுகளிலிருந்து இறக்குமதியானதாகும். [6]

நீர்ம இயற்கை எரிவாயுவின் சார்புநிலையை குறைக்க, மியான்மர் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய சீனா குழாய் வழிகளை அமைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கிழக்கு உருசியாவிலிருந்து பெரிய அளவிலான எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை சீனா கையெழுத்திட்டுள்ளது. இதன்படி 2018 ஆம் ஆண்டு முதல் உருசியா இயற்கை எரிவாயுவை சீனாவுக்கு அனுப்பத் தொடங்கியது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chen, Weidong (July 24, 2014). "The Outlook for a Chinese Pivot to Gas". The National Bureau of Asian Research. http://nbr.org/research/activity.aspx?id=470. 
  2. Herberg, Mikkal. (2013, November). "Introduction: Asia's Uncertain LNG Future". NBR Special Report. Retrieved from http://www.nbr.org/publications/element.aspx?id=709.
  3. Trakimavičius, Lukas (May 15, 2019). "What China’s Appetite for Gas Could Mean for the World". Asian Times. https://www.asiatimes.com/2019/05/opinion/what-chinas-appetite-for-gas-could-mean/. 
  4. OPEC, Statistical Bulletin பரணிடப்பட்டது 2018-02-27 at the வந்தவழி இயந்திரம், accessed 29 Nov. 2014.
  5. OPEC, Statistical Bulletin பரணிடப்பட்டது 2018-02-27 at the வந்தவழி இயந்திரம், accessed 29 Nov. 2014.
  6. Ma, Damien. (2013, November). "China's Coming Decade of Natural Gas". NBR Special Report: Asia's Uncertain LNG Future. Retrieved from http://www.nbr.org/publications/element.aspx?id=711
  7. US EIA, Natural gas serves a small, but growing, portion of China’s total energy demand, Today in Energy, 18 Aug. 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_இயற்கை_எரிவாயு&oldid=3157742" இலிருந்து மீள்விக்கப்பட்டது