சபாபதி தட்சிணாமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாபதி
பிறப்புசபாபதி தட்சிணாமூர்த்தி
மற்ற பெயர்கள்எஸ். டி சபா, சபாபதி, சபா கைலாஷ்
பணிஇந்திய திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போது வரை

எஸ். டி சபா என்றும் சபா கைலாஷ் என்றும் அறியப்படும் சபாபதி தட்சிணாமூர்த்தி (Sabapathy Dekshinamurthy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.[1][2][3][4]

தொழில்[தொகு]

சபாபதி தட்சிணாமூர்த்தி எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் டி.எஃப்.டி முடித்த பின்னர் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இது முன்பு அடார் திரைப்பட நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. சபாபதி 1992 இல் பரதன் படத்தின் வழியாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய பெருவெற்றியான முதல் தமிழ் படம் பரதன் ஆகும். அதன் பிறகு சுந்தர புருஷன், வி.ஐ.பி, புன்னகை பூவே, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நாம் ஆகிய படங்களை இயக்கினார். சுந்தர புருஷன் தெலுங்கில் அந்தலா ராமுடு என 2006இல் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

2001 ஆம் ஆண்டில், ராம்கி, ரோஜா, குஷ்பூ, சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இரண்டு' பேர் என்ற திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினர். இருப்பினும் படம் வெளியிடப்படவில்லை.[5]

பிருத்விராஜ், ஸ்ரீகாந்த், பூமிகா சாவ்லா, மது ஷாலினி ஆகியோர் நடிக்க 2009 ஆம் ஆண்டில் மா என்ற குடும்ப நாடகத் திரைப்படத்தை தயாரிப்பதில் சபாபதி சிலகாலம் செலவிட்டார். ராமேஸ்வரத்தில் முதல் கட்ட படப்பிடிப்புக்கு திட்டமிடப்பட்டட போதிலும், படம் நிதி சிக்கல்களினால் நிறுத்தப்பட்டது.[6]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1992 பரதன் தமிழ்
1993 எங்க தம்பி தமிழ்
1996 சுந்தர புருஷன் தமிழ்
1997 வி.ஐ.பி. தமிழ்
2003 புன்னகை பூவே தமிழ்
நாம் தமிழ்
2005 பந்தெம் தெலுங்கு
2009 அ ஆ இ ஈ தமிழ்
2011 பதினாறு தமிழ்
ஜாலி பாய் கன்னடம்

குறிப்புகள்[தொகு]

 

  1. "Director Sabapathy turns to be busy bee". Kollywood Today. 2008-10-13. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  2. "Cinema Plus / Cinema : Back after a break". தி இந்து. 2008-12-12. Archived from the original on 2008-12-15. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  3. cinesouth. "Dailynews - Sabapathy's '16'". Cinesouth.com. Archived from the original on 12 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  4. "Events - '16' Movie Launch". IndiaGlitz. 2008-10-15. Archived from the original on 16 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-08-05.
  5. https://web.archive.org/web/20060326001013/http://www.screenindia.com/20010824/rtam.html
  6. http://www.behindwoods.com/image-gallery-stills/photos-10/maa/maa-01.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாபதி_தட்சிணாமூர்த்தி&oldid=3979215" இலிருந்து மீள்விக்கப்பட்டது