கிரிதாரி யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிதாரி யாதவ்
17ஆவது மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதி பாங்கா
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2010–2019
தொகுதிபேல்ஹர்
11-ஆவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–1998
தொகுதிபாங்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஏப்ரல் 1961 (1961-04-14) (அகவை 63)
பாங்கா, பீகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்சுமித்ரா யாதவ்
பிள்ளைகள்3
As of 15 July, 2019
மூலம்: [1]

கிரிதாரி யாதவ் (Giridhari Yadav) (பிறப்பு 14 ஏப்ரல் 1961) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] தற்போது இவர் பிகாரின் பாங்கா மக்களவை உறுப்பினராக உள்ளார்.

இவர் ஐக்கிய ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பாங்காவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் யாதவ் மூன்று முறை மக்களவைக்கும் நான்கு முறை பீகார் சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] இவர் ஜனதா தளத்தில் இருந்த போது பீகார் சட்டமன்றத்திற்கும், 11ஆவது மக்களவைக்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தில் இருந்தபோது பீகார் சட்டப்பேரவைக்கும் மற்றும் 14ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] யாதவ் 2010ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். மேலும் ஜேடியூ (யு) மற்றும் 17ஆவது மக்களவைக்கும் பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளமை[தொகு]

கிரிதாரி யாதவ் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பீகாரின் பாங்காவில் பிறந்தார்.[4] இவரது தந்தை தனோ யாதவ் இந்திய இரயில்வே பள்ளி ஆசிரியராக இருந்தார். இவரது தாயார் ஜக்தி தேவி ஆவார்.[5] இவர் தனோ மற்றும் ஜக்தியின் ஏழு குழந்தைகளில் ஒருவர் ஆவார்.

யாதவ் 1982ஆம் ஆண்டில் பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[6] பின்னர் இவர் சாகர் டி. எச். ஜி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றார். இங்கு இவர் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார் பின்னர் 33 வயதில் பாகல்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார்.[7][8] யாதவ் 1976ஆம் ஆண்டில் சுமித்ரா தேவியை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

தொடக்க காலத் தொழில்[தொகு]

கிரிதாரி யாதவ் மத்தியப் பிரதேசத்தில் வரலாற்று மாணவராக இருந்தார், ராஜீவ் காந்தி அரசாங்கத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸில் இளைஞர் ஒருங்கிணைப்பாளராக மத்தியப் பிரதேசத்தின் சாகரில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னாள் முதலமைச்சர் அர்ஜுன் சிங், பி. ஆர். யாதவ் மற்றும் சந்தோஷ் சாஹு ஆகியோருடன் இவர் நெருங்கியவர் என்று கூறப்படுகிறது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கிரிதாரி யாதவ் ஒரு சோசலிச அரசியல்வாதி வகுப்பைச் சேர்ந்தவர். இராஜீவ் காந்தியின் காலத்தில் இந்திய இளைஞர் காங்கிரசில் இருந்த இவர் வி.பி.சிங் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் . யாதவ், ஆகஸ்ட் 1994 இல், மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்த பிறகு மீண்டும் பீகாருக்குச் சென்று ஜனதா தளத்தின் கட்சி ஊழியராகப் பணியாற்றினார். 1995-ஆம் ஆண்டில், பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பீகார் மாநிலம் கட்டோரியாவில் போட்டியிட்டார். [9] பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் யாதவ் வெற்றி பெற்ற பிறகு, 11ஆவது மக்களவைக்கு பீகாரின் பாங்கா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

1997-ஆம் ஆண்டில், இவர் ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட இராச்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் சார்பாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார். [10] இவர் 12ஆவது மக்களவைத் தேர்தலின் போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திக்விஜய் சிங்கிடம் மொத்த வாக்குகளில் 1%-இற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். 2000-ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தலில் கட்டோரியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13-ஆவது மக்களவைக்கான தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மிகக்குறுகிய வாக்கு வேறுபாட்டில் தோற்றார்.[11]

2004 ஆம் ஆண்டில், திக்விஜய் சிங்கை தோற்கடித்து 14 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிதாரி யாதவ், அப்போதைய மக்களவை உறுப்பினராக இருந்தபோது, இராச்டிரிய ஜனதா தள் கட்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னர், லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2010 ஆம் ஆண்டில், யாதவ் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார் மற்றும் பீகாரின் பெல்ஹார் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014-ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலாளரானார். இராச்டிரிய ஜனதா தள் கூட்டணித் தலைவர் முகமது ஷாஹாபுதீனுடன் இணைந்ததற்காக விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டில் யாதவ் தனது பதவியிலிருந்து விலகினார். [12] 2015 ஆம் ஆண்டில் தனது நான்காவது முறையாக பீகார் சட்டமன்றத்திற்கு பெல்ஹார் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Vidhan Sabha Members" (PDF).
  2. "Members of Vidhan Sabha Bihar" (PDF).
  3. Srivastava, Amitabh (April 24, 2009). "Digvijay, Girdhari bank on Banka". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-13.
  4. "Giridhari Yadav(Janata Dal (United)(JD(U))):Constituency- BELHAR(BANKA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.
  5. "Affidavit of 2015 elections".
  6. "Affidavit 2004 elections".
  7. "Affidavit 2004 Lok Sabha elections".
  8. "Affidavit of 2004 Lok Sabha elections".
  9. "Bihar Assembly Election Results in 1995". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.
  10. "Rashtriya Janata Dal | political party, India". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.
  11. "Banka(Bihar) Lok Sabha Election Results 2019 with Sitting MP and Party Name". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.
  12. "JD(U) may take action against MLA Giridhari Yadav for mingling with Shahabuddin". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-05-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிதாரி_யாதவ்&oldid=3942821" இலிருந்து மீள்விக்கப்பட்டது