உள்ளடக்கத்துக்குச் செல்

கரும்பு கட்டை பயிர் சாகுபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறுதாம்பு சாகுபடி அல்லது கட்டை பயிர் சாகுபடி (Sugarcane ratoon crop cultivation) என்பது நடவு கரும்பை அறுவடை செய்த பின், மீண்டும் அடிக்கரும்பை சாகுபடிக்கு கொண்டு வருவதைக் குறிப்பதாகும்.[1] பொதுவாக இச்சாகுபடி முறைய்யானது கரும்பில் முதன்மையாக பின்பற்றப்படுகிறது, என்றாலும் பருத்தி, சம்பங்கி, சோளம், கீரைகள் போன்ற பயிர்களிலும் இம்முறை பின்பற்றப் படுகிறது.

கரும்பில் கட்டைப் பயிர் சாகுபடி[தொகு]

  • முதல் கரும்பு அறுவடை முடிந்தபின் கரும்பு தோகையை தீயிட்டு அகற்றிவிடவேண்டும்.
  • உடனே வயலலில் நீர்பாய்ச்ச வேண்டும்.
  • நிலமட்டத்திற்கு கீழ் கரும்பு கட்டைகளை செதுக்கி விடவேண்டும்
  • பார்களை உடைத்துவிடவேண்டும்.
  • பாலிதீன் பைகளில் வளர்த்த கரும்பு நாற்றுகளை பயன்படுத்தி பாடுவாசி (gap filling) நிரப்ப வேண்டும்.
  • 25% தழைச்சத்தை கூடுதலாக இட வேண்டும்.
  • பின் அனைத்து செயல்முறைகளும் நடவுகரும்பை போல் செய்ய வேண்டும்.

கரும்பு சாகுபடியில் ஒரு நடவு, இரண்டு கட்டை பயிர்,என சாகுபடி செய்தால் லாபம் பெறலாம்.

சான்றுகள்[தொகு]

  1. handbook of agriculture, Indian Council of Agricultural Research