கங்காச்சாரா சேக் அசீனா பாலம்

ஆள்கூறுகள்: 25°52′08″N 89°15′19″E / 25.8688476°N 89.25521°E / 25.8688476; 89.25521
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காச்சாரா சேக் அசீனா பாலம்
গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু
மொத்த நீளம் 650 m
அகலம் 12.1 m
இடைத்தூண் எண்ணிக்கை 15
அமைவு 25°52′08″N 89°15′19″E / 25.8688476°N 89.25521°E / 25.8688476; 89.25521

கங்காச்சாரா சேக் அசீனா பாலம் (Gangachara Sheikh Hasina Bridge) வங்காளதேசத்தில் உள்ள ரங்க்பூர் மாவட்டத்தின் துணை மாவட்டமான கங்காச்சாராவில் அமைந்துள்ளது. இலால்மோனிராட்டு - ரங்க்பூர் நெடுஞ்சாலையில் டீசுட்டா ஆற்றின் மேல் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை நீடித்தது. கங்காச்சாரா சேக் அசீனா பாலத்தை வங்கதேச பிரதமர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று திறந்து வைத்தார். இப்பாலம் 650 மீட்டர் நீளமும் 12.1 மீட்டர் அகலமும் கொண்டது. 15 இடைவெளிகள் கொண்ட 16 தூண்களால் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானத்தின் மொத்த செலவு 1.2209 பில்லியன் டாக்காகள் ஆகும். 60 மீட்டர் அகலத்துடன் ஓடும் ஆற்றை 2.29 கிலோமீட்டர் தொலைவில் சாலை மூலம் அணுகமுடியும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "কাউনিয়া উপজেলা". http (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
  2. "ভিডিও কনফারেন্সে 'শেখ হাসিনা তিস্তা সেতু'র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | banglatribune.com". Bangla Tribune (in Bengali). Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.