எங்க வீட்டுப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்க வீட்டு பிள்ளை
இயக்கம்சாணக்யா
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா புரொடக்சன்சு
சக்கரபாணி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 14, 1965
நீளம்5176 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

எங்க வீட்டுப் பிள்ளை (Enga Veettu Pillai) 1965ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் நாளில் எம். ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு , நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2] இதனை இயக்கியவர் தபி சாணக்யா. தயாரித்தவர் பி. நாகிரெட்டி, விஜயா புரொடக்சன்ஸ், சக்கரபாணி. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.[3] இது பெரும் வெற்றி பெற்றது.

ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.

இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.

பாடல்கள்[தொகு]

  • நான் ஆணையிட்டால்...

பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.

  • நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...

பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.

  • கண்களும் காவடி சிந்தாகட்டும்...

பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

  • பெண் போனாள்...இந்த பெண் போனால்...

பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.

  • மலருக்குத் தென்றல் பகையானால்...

பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.

  • குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...

பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.

மேற்கோள்கள்[தொகு]

  1. எங்க வீட்டுப் பிள்ளை 50 ஆண்டுகள் நிறைவு: மறுபடியும் முதல்லேருந்தா? இந்து தமிழ் நாளிதழ் 05 Jun 2015
  2. Ramachandran, T. M. (7 August 1965). "M. G. R.'s unique triumph". Sport and Pastime. Vol. 19. p. 51. Archived from the original on 3 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023 – via Internet Archive.
  3. [எங்க வீட்டுப் பிள்ளை சினிமா விமர்சனம் 24.1.1965 ஆனந்த விகடன் - பொக்கிசம் பகுதி 25-03-2009]

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_வீட்டுப்_பிள்ளை&oldid=3972296" இலிருந்து மீள்விக்கப்பட்டது