இரிடியம்(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(II) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் இருகுளோரைடு, இரிடியம் பைகுளோரைடு
இனங்காட்டிகள்
13465-17-3
InChI
  • InChI=1S/2ClH.Ir/h2*1H;/q;;+2/p-2
    Key: BBVIQHLJRNEBBW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ir+2].[Cl-].[Cl-]
பண்புகள்
Cl2Ir
வாய்ப்பாட்டு எடை 263.12 g·mol−1
தோற்றம் அடர்-பச்சை நிறப் படிகங்கள்
உருகுநிலை 773 °C (1,423 °F; 1,046 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம்(II) குளோரைடு (Iridium(II) chloride) IrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] இரிடியமும் ஐதரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோக உப்பு உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

தூள் செய்யப்பட்ட உலோக இரிடியத்துடன் குளோரின் வாயுவைச் சேர்த்து சூடாக்கப்படும் போது இரிடியம்(II) குளோரைடு உருவாகிறது.:[3][4]

Ir + Cl2 -> IrCl2

இரிடியம்(III) குளோரைடு மற்றும் உலோக இரிடியம் ஆகியவற்றுக்கு இடையேயான வினையிலும் இரிடியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

2IrCl3 + Ir -> 3IrCl2

இயற்பியல் பண்புகள்[தொகு]

இரிடியம்(II) குளோரைடு பளபளப்பான கரும்-பச்சை படிகங்களாக உருவாகிறது. இவை நடைமுறையில் நீரில் கரையாது.[5] அமிலங்கள் மற்றும் காரங்களில் சிறிதளவு கரையும். 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும்போது இது உருகாமல் சிதைகிறது.

ΔG (298 கெல்வின், கிலோயூல்/மோல்) உருவாக்கத்தின் நிலையான கிப்சு ஆற்றல் அளவு -139.7 ஆகும்.

வேதிப் பண்புகள்[தொகு]

இரிடியம்(II) குளோரைடை 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சமன்பாட்டில் கண்டவாறு சிதைக்வடைகிறது:[6]

2IrCl2 -> 2IrCl + Cl2

798 ° செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது முழுமையாகச் சிதைவடைகிறது:

IrCl2 -> Ir + Cl2

மேற்கோள்கள்[தொகு]

  1. Regnault, Victor (1853). Elements of Chemistry: For the Use of Colleges, Academies, and Schools (in ஆங்கிலம்). Clark & Hesser. p. 355. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  2. Kandiner, H. J. (3 September 2013). Iridium (in ஜெர்மன்). Springer-Verlag. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-12128-3. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  3. Cooley, Arnold James (1880). A cyclopædia of practical receipts (in ஆங்கிலம்). p. 906. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  4. Watts, Henry (1875). A Dictionary of Chemistry and the Allied Branches of Other Sciences (in ஆங்கிலம்). Longmans, Green, and Company. p. 318. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  5. Friend, John Newton (1922). Cobalt, Nickel, and the Elements of the Platinum Group (in ஆங்கிலம்). Griffin. p. 243. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  6. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 629. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(II)_குளோரைடு&oldid=3743030" இலிருந்து மீள்விக்கப்பட்டது