ஆர்கான் புளோரோவைதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்கான் புளோரோவைதரைடு
Argon fluorohydride
Argon fluorohydride
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆர்கான் ஐதரோபுளோரைடு
இனங்காட்டிகள்
163731-16-6 Y
ChemSpider 15863741 Y
InChI
  • InChI=1S/ArFH/c1-2/h1H Y
    Key: HEPJAPHKUAGBIG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/ArFH/c1-2/h1H
    Key: HEPJAPHKUAGBIG-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
  • F[ArH]
பண்புகள்
HArF
வாய்ப்பாட்டு எடை 59.954 கி/மோல்
தோற்றம் அறியப்படவில்லை
அடர்த்தி அறியப்படவில்லை
உருகுநிலை −256 °C (−428.8 °F; 17.1 K) (சிதைவடையும்)
அறியப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஆர்கான் புளோரோவைதரைடு (Argon fluorohydride ) என்பது HArF என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். மூலக்கூறு வாய்ப்பாடு ArHF என்றும் எழுதப்படுவதுண்டு. ஆர்கானின் வேதியியல் சேர்மமான இதன்பெயர் வேதியியல் முறைப்படி புளோரிடோவைதரிடோ ஆர்கான் அல்லது ஐதரோபுளோரைடு ஆகும்.

கண்டுபிடிப்பு[தொகு]

முதல் ஆர்கான் சேர்மத்தைக் கண்டறிந்த பெருமை பின்னிய நாட்டைச் சேர்ந்த மார்க்கு இராசனென் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினருக்கேச் சேரும்[1] . 2000 ஆம் ஆண்டின் ஆகத்து 24 ஆம் நாளில் நேச்சர் என்ற இதழில் ஆர்கான்புளோரோவைதரைடு கண்டுபிடிப்பை அவர்கள் வெளியிட்டனர்[2].

தொகுப்பு முறைத் தயாரிப்பு[தொகு]

சீசியம் அயோடைடு மேற்பரப்பில் – 265 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆர்கான் மற்றும் ஐதரசன் புளோரைடு இரண்டையும் சேர்த்து கலவையை புற ஊதாக்கதிர் கதிர்வீச்சுக்கு காட்சிப்படுத்தினால் ஆர்கான் புளோரோவைதரைடு உருவாகிறது. இக்கதிர்வீச்சு வளிமங்கள் இணைவதற்கு உதவுகிறது.

இத்தொகுப்பு வினையின் விளைவாகத் தோன்றும் கலவையில் வேதிப் பிணைப்புகள் உள்ளதை அகச்சிவப்பு நிறமாலை உறுதிப்படுத்துகிறது. ஆனாலும் அவை வலிமையற்ற பிணைப்புகளாக உள்ளன. இப்படியாக, மிகைமூலக்கூறோ அல்லது ஆர்கான் மற்றும் ஐதரசன் வாயுக்களின் கலவையோ அல்லாமல் ஆர்கான் புளோரோவைதரைடு உருவானது. இச்சேர்மத்தின் வேதிப்பிணைப்புகள் – 256 பாகை செல்சியசு வெப்பநிலைக்குக் கீழாக இச்சேர்மத்தை வைத்திருந்தால் மட்டுமே நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன. மாறாக இவ்வெப்பநிலைக்கு மேற்பட்டால் இச்சேர்மம் ஆர்கான் மற்றும் ஐதரசன் புளோரைடாகச் சிதைவடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Räsänen, Markku (17 December 2013). "Argon out of thin air". Nature Chemistry 6 (1): 82. doi:10.1038/nchem.1825. http://www.nature.com/nchem/journal/v6/n1/full/nchem.1825.html. 
  2. Khriachtchev, Leonid; Mika Pettersson; Nino Runeberg; Jan Lundell; Markku Räsänen (24 August 2000). "A stable argon compound". Nature 406 (6798): 874–876. doi:10.1038/35022551. பப்மெட்:10972285. http://www.nature.com/nature/journal/v406/n6798/abs/406874a0.html. 

உசாத்துணை[தொகு]

  • Emsley, John (2001). Nature's Building Blocks: An A–Z Guide to the Elements. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850341-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கான்_புளோரோவைதரைடு&oldid=3581074" இலிருந்து மீள்விக்கப்பட்டது