அல்-பிருனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்-பிருனி
சோவியத் ஒன்றியம், 1973இல் வெளியிட்ட அல்பிரூனியின் அஞ்சல் தலை
முழுப் பெயர்அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ
பிறப்பு4/5 செப்டம்பர் 973
காத் நகரம், தற்கால உஸ்பெகிஸ்தான்
இறப்பு13 திசம்பர் 1048(1048-12-13) (அகவை 75)
கஜினி நகரம், கஜினி மாகாணம், தற்கால ஆப்கானித்தான்
Eraஇசுலாமியப் பொற்காலம்
சமயம்நடு ஆசியா
ஈரான்[1]
கஜினி, கஜினிப் பேரரசு[2]
பிரதான விருப்புபுவியியல், இயற்பியல், மானிடவியல், சமூகவியல் , வானவியல், சோதிடம், வேதியியல், வரலாறு, நிலவியல், கணக்கியல், மருத்துவம், உளவியல், இசுலாமியத் தத்துவம், இசுலாமிய மெய்யியல்
Notable ideasஇந்தியவியல், நிலவியல் வரைபடங்கள்
Major worksகடந்த நூற்றாண்டுகளின் எச்சங்கள், நவரத்தினங்கள், இண்டிகா, சோதிடம்
தாக்கம்
ஐக்கிய நாடுகள் அவை அலுவலகத்தில், பாரசீக அறிஞர்கள் காட்சிக்கூடத்தில் அல்-பரூனீயின் உருவச்சிலை, வியன்னா, ஆஸ்திரியா

அல்-பீரூனி (Al-Bīrūnī) என்ற அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ (Al-Bīrūnī alias Abū Rayḥān Muḥammad ibn Aḥmad Al-Bīrūnī ) (பிறப்பு: 4/5 செப்டம்பர் 973 - இறப்பு: 13 டிசம்பர் 1048) [3] நவீன பாரசீக மொழியில் இவரை அபூ இராய்ஹான் பிரூனீ என்றழைப்பர்.[4]) [5] வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதியதின் மூலம் இந்தியவியலுக்கு பெரும் பங்காற்றியவர்.

மத்திய கால இசுலாமிய அறிஞரான அல்பீரூனி, இயற்பியல், கணக்கு, வானவியல், இயற்கை அறிவியல், மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றியவர். அரபு, பாரசீகம், கிரேக்கம், யூதம், சிரியாக் மற்றும் சமசுகிருத மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். தற்கால மத்திய கிழக்கு ஆப்கானித்தானின் கஜினி மாகாணத்தில் அதிக காலம் வாழ்ந்தவர்.

1017இல் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பயணித்து இந்துக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களை கூர்ந்து நோக்கி, தாரிக்-அல்-ஹிந்த் (இந்தியாவின் வரலாறு) என்ற நூலை எழுதியதால், இவரை இந்தியவியல் நிறுவனர் என்று பாராட்டப்பட்டார். மேலும் பல இந்தியத் துணை கண்டத்தின் பல நாட்டு மக்கள் பின்பற்றும் சமயங்கள், சமயப் பழக்க வழக்கங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவை விளக்கும் வகையில் அல்-உஸ்தாத் ("The Master") என்ற நூலை வெளியிட்டார். மேலும் 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் புவி அறிவியல் தொடர்பாக பல பங்களிப்புகளை செய்ததால், அல்-பரூனீயை நவீன புவியியல் வரைபடங்களின் தந்தை என என்று போற்றப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

தற்கால உஸ்பெகிஸ்தான் நாட்டின் காத் நகரத்தில் பிறந்தவர்.[6] .[7]

அல்பரூனீ தன் முதல் இருபத்தனைந்து ஆண்டுகள் ஆப்கானித்தானில் இசுலாமிய நீதிக்கல்வி, மெய்யியல், இலக்கணம், வானவியல், மருத்துவம் மற்றும் பிற கல்விகளை பாரசீக மொழியில் பயின்றவர்.[8][9] பின்னர் 995இல் புக்காராவிற்கு பயணமானார்.[10]

998இல் தபரிஸ்தான் அமீரகத்திற்கு சென்றார். அங்கு அவர் பண்டைய நூற்றாண்டுகளின் எச்சங்கள் (al-Athar al-Baqqiya 'an al-Qorun al-Khaliyya) என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றார்.

1017இல் கஜினி முகமது அல்-பரூனியை தன்னுடன் இந்தியப் படைப்யெடுப்புகளின் போது அழைத்துச் சென்றார்.[1] மேலும் தன்னுடய அரசவை சோதிடராக நியமித்துக் கொண்டார்.[11] அல்பரூனீ பாரத நாடு தொடர்பான பல விடயங்களை உற்று நோக்கினார். சமசுகிருத மொழியை கற்று,[12] தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதி முடித்தார்..[13] இந்திய வானவியலையும் கற்று தேர்ந்தார்.

வானவியலும் கணக்கீடுகளும்[தொகு]

அல் பரூனீ வரைந்த நிலவின் பன்முகத் தோற்றங்கள்
புவியில் ஆரத்தையும், சுற்றளவையும் விளக்கும் அல்-பரூனீயின் வரைபடம்
நிலாவின் ஒரு பள்ளத்திற்கு அல்-பரூனீ பள்ளம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது

.

வானவியல், கணக்கு, புவியியல் கணக்குகள் தொடர்பாக அல்-பரூனீ எழுதிய 146 நூல்களில் 95 நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.[14] சோதிடம் தொடர்பான வானவியல் மற்றும் வானவியல் கணக்கீடுகள் குறித்து இவர் பல நூல்கள் எழுதியிருந்தாலும், சோதிடக் கட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர்.[15][16]

மற்றவர்கள் என்ன கூறியிருந்தாலும் புவி, சூரியனை சுழல்கிறது என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்.[17] இந்தியச் சோதிடக் கலையைக் குறித்து அதிக விமர்சனங்கள் வழங்கியவர்.

சமயங்களின் வரலாறு[தொகு]

சமயங்களின் வரலாறு குறித்த அல்-பரூனீயின் நூல்கள் இசுலாமிய நிறுவனங்களால் போற்றப்படுகிறது.[18] அல் பரூனீ சரத்துஸ்திர சமயம், யூதம், இந்து, பௌத்தம், இசுலாம் மற்றும் பிற சமயங்களை ஒப்பு நோக்கி ஆராய்ந்தவர். இசுலாம் அல்லாத பிற சமயங்களை, அதனதன் நோக்கிலே ஆராய்ந்தவரே அன்றி, மற்ற சமயங்களுடன் ஒப்பிட்டு, குறை கண்டுபிடிக்கும் முயற்சியில் நோக்கவில்லை.

இந்தியவியல்[தொகு]

இந்தியவியல் அறிஞரான அல்பரூனீயின் புகழ் பெற்ற நூல்களில், இந்திய வரலாறு எனும் தாரிக் அல்-ஹிந்த்[19] எனும் நூல் இந்திய நிலவியல், இந்திய மக்களின் பழக்க வழக்கங்கள், சமயச் சடங்குகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், அரசியல், மத நம்பிக்கைகள், இசுலாமியர்கள் மீதான இந்துக்களின் விரோத மனப்பான்மை ஆகியவைகள் குறித்து விரிவாக விளக்குகிறது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
  1. 1.0 1.1 The Exact Sciences, E.S.Kennedy, The Cambridge History of Iran: The period from the Arab invasion to the Saljuqs, Ed. Richard Nelson Frye, (Cambridge University Press, 1999), 394.
  2. Kemal Ataman, Understanding other religions: al-Biruni's and Gadamer's "fusion of horizons", (CRVP, 2008), 58.
  3. MAcKENZIE, D. (1971). A Concise Pahlavi Dictionary (p. 18). OXFORD UNIVERSITY PRESS
  4. BĪRŪNĪ, ABŪ RAYḤĀN. Encyclopædia Iranica
  5. Encyclopædia Britannica, al-Biruni (Persian scholar and scientist) – Britannica Online Encyclopedia, Britannica.com, பார்க்கப்பட்ட நாள் 2010-02-28
  6. Al-Biruni, D.J. Boilet, The Encyclopaedia of Islam, Vol. I, ed. H.A.R. Gibb, J.H. Kramers, E. Levi-Provencal, J. Schacht, (Brill, 1986), 1236.
  7. C. Edmund Bosworth, "BĪRŪNĪ, ABŪ RAYḤĀN i. Life" in Encyclopedia Iranica. Access date April 2011 at [1]
  8. Gotthard Strohmaier, "Biruni" in Josef W. Meri, Jere L. Bacharach, Medieval Islamic Civilization: A-K, index: Vol. 1 of Medieval Islamic Civilization: An Encyclopedia, Taylor & Francis, 2006. excerpt from page 112: "Although his native Khwarezmian was also an Iranian language, he rejected the emerging neo-Persian literature of his time (Firdawsi), preferring Arabic instead as the only adequate medium of science.";
  9. D. N. MacKenzie, Encyclopaedia Iranica, "CHORASMIA iii. The Chorasmian Language" [2] "Chorasmian, the original Iranian language of Chorasmia, is attested at two stages of its development..The earliest examples have been left by the great Chorasmian scholar Abū Rayḥān Bīrūnī.
  10. Firoozeh Papan-Matin, Beyond death: the mystical teachings of ʻAyn al-Quḍāt al-Hamadhānī, (Brill, 2010), 111.
  11. Marshall G. S. Hodgson, The Venture of Islam: Conscience and History in a World Civilization, Vol.3, (University of Chicago Press, 1958), 168.
  12. Jean Jacques Waardenburg, Muslim Perceptions of other Religions: A Historical Survey, (Oxford University Press, 1999), 27.
  13. Jean Jacques Waardenburg, 27.
  14. George Saliba, "BĪRŪNĪ, ABŪ RAYḤĀN iii. Mathematics and Astronomy" in Encyclopaedia Iranica
  15. 'Book of Instruction in the Elements of the Art of Astrology', c.1027
  16. George C. Noonan, 'Classical Scientific Astrology'
  17. Douglas (1973, p.210)
  18. François de Blois,"BĪRŪNĪ, ABŪ RAYḤĀN vii. History of Religions" in Encyclopaedia Iranica
  19. Bruce B. Lawerence, "BĪRŪNĪ, ABŪ RAYḤĀN viii. Indology" in Encyclopaedia Iranica
Bibliography

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abu Rayhan al-Biruni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இணையத்தில் அல் பரூனீ[தொகு]

மேல் வாசிப்பிற்கு[தொகு]

  • On the Presumed Darwinism of Alberuni Eight Hundred Years before Darwin Jan Z. Wilczynski Isis Vol. 50, No. 4 (Dec., 1959), pp. 459–466 (article consists of 8 pages) Published by: The University of Chicago Press on behalf of The History of Science Society Stable URL: [11]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-பிருனி&oldid=3818029" இலிருந்து மீள்விக்கப்பட்டது