அமிதாவ் மாலிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிதாவ் மாலிக்
Amitav Malik
பிறப்புஇந்தியா
பணிபாதுகாப்புத் தொழில்நுட்பம்
அறியப்படுவதுபாதுகாப்புத் தொழில்நுட்பம்
விருதுகள்பத்மசிறீ

அமிதாவ் மாலிக் (Amitav Malik) ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பவியலாளர் மற்றும் சீரொளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிறுவனர் இயக்குனர் ஆவார். இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பாதுகாப்பு அமைப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இவர் நிபுணத்துவம் பெற்றவராவார். [1] [2] இவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் ஆலோசகராகவும் [1][3] வாசிங்டன்னிலுள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் முன்னாள் ஆலோசகராகவும் இருந்தார். [2] 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பும் தொழில்நுட்பமும், பாதுகாப்புத் தொழில்நுட்பம், தேவை ஒரு பக்க பார்வை என்ற தலைப்புகளில் புத்தகங்களும் [4] 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆவணங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பம் குறித்த 100 எண்னிக்கைக்கும் மேற்பட்ட வகைப்படுத்தப்பட்ட பகுப்பாய்வு ஆவணங்கள் போன்றவற்றுக்கு ஆசிரியராக இருந்தார். இவரது சேவைகளை பாராட்டும் விதமாக இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "LASTEC". Uni Pune. 2015. பார்க்கப்பட்ட நாள் January 22, 2015.
  2. 2.0 2.1 "Aprameya". Aprameya. 2015. Archived from the original on சனவரி 22, 2015. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2015.
  3. "DRDO". 2015. DRDO. Archived from the original on March 3, 2016. பார்க்கப்பட்ட நாள் January 22, 2015.
  4. Amitav Malik (2004). Technology and Security in the 21st Century: A Demand-side Perspective. Stockholm International Peace Research Institute. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-927176-4. Archived from the original on 2016-04-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-22. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  5. "Padma Awards Directory (1954-2013), Year-Wise List" (PDF). Ministry of Home Affairs. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதாவ்_மாலிக்கு&oldid=3947175" இலிருந்து மீள்விக்கப்பட்டது