விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024
@Sridhar G: வணக்கம். 2023 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை நடத்தியபோது, விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023/தலைப்புகள் எனும் பக்கத்தை உருவாக்கித் தந்தீர்கள். இதேப் பக்கத்தை 2024 ஆம் ஆண்டிற்கும் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், துப்புரவு / செம்மையாக்கப்பட வேண்டிய கட்டுரைகளைப் பார்வையிடுதல் சற்று கடினமாக (அல்லது) சலிப்பூட்டுவதாக இருப்பதாக உணர்கிறேன். செய்து முடித்ததை அட்டவணைகளில் ஆயிற்று என இற்றை செய்வதும் பயனர்களுக்கு சற்றுக் கடினமாக இருக்கும். புதிதாக பட்டியலிருந்தால் திட்டத்தின் செயல்திறனை அளக்கவும் எளிதாக இருக்கும். விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024/தலைப்புகள் எனும் பக்கத்தில் 729 கட்டுரைகளின் பட்டியலை புதிதாக உருவாக்கலாமா? உங்களின் எண்ணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:50, 24 திசம்பர் 2023 (UTC)
- தாராளமாக உருவாக்கலாம்.-- ஸ்ரீதர். ஞா (✉) 08:23, 24 திசம்பர் 2023 (UTC)
@Sridhar G: உருவாக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுமார் 10 அட்டவணைகளில் பிரித்து, பட்டியல்படுத்துவதற்கு பரிந்துரைக்கிறேன். கையாள எளிதாக இருக்கும் என நம்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:37, 24 திசம்பர் 2023 (UTC)
- ஆயிற்று பைட்டுகள் வாரியாக பட்டியலிட்டுள்ளேன். கையாள எளிதாக இருக்கும் என்பதற்காக விரிக்கும் வகையில் உள்ளன. விக்கிப்பீடியா நடைமுறைகள் தெரிந்தவர்களே துப்புரவு செய்வார்கள் என்பதால் இவ்வாறு செய்துள்ளேன். வேறு மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? -- ஸ்ரீதர். ஞா (✉) 11:43, 29 திசம்பர் 2023 (UTC)
Page ID, Namespace இவற்றை இப்போது நீக்க இயலுமா? Last change என்பதனை நிலை என்பதாக இப்போது மாற்ற இயலுமா? இதற்குரிய Cellsஐ பயனர்கள் நிரப்புமாறு வெற்றாகவே விட்டுவிடலாம். (நடப்பு ஆண்டில் உள்ள அட்டவணை போன்று) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 29 திசம்பர் 2023 (UTC)
- வணக்கம், இதனை இரு தினங்களுக்குள் செய்து முடிக்கிறேன்.நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 14:09, 29 திசம்பர் 2023 (UTC)
- ஆயிற்று பயனர் என்பதனையும் இணைத்துள்ளேன். பயனர்கள் வாரியாக கணக்கிட உதவியாக இருக்கும்.வேறு மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 02:15, 30 திசம்பர் 2023 (UTC)
பணியை நிறைவு செய்வதற்கான பரிந்துரை[தொகு]
இன்றைய நாளில், இன்னமும் 352 கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. பெரும்பாலான கட்டுரைகளின் மீது உரையாடல் நடத்தி, அவற்றை துப்புரவு அல்லது செம்மைப்படுத்துதல் செய்யவேண்டியது உள்ளது. இப்பணியை விரைந்து முடித்திட, 2 பரிந்துரைகளை முன்வைக்கின்றேன். பயனர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்டம் நோக்கி நகரலாம்.
- தொடர்பங்களிப்பாளர்கள் எளிதில் பயணிக்கும் வகையில் ஒரு நகரைத் தெரிவு செய்து, 10 பேர் ஒன்றுகூடி ஒரு நாள் செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யலாம். காலையில் பயனர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள அறைகள், அமர்ந்து பணியாற்ற ஒரு அறை, Wi-Fi வசதி இவற்றை ஒரு கல்வி நிலையம் / ஒரு நிறுவனம் தந்து உதவினால் குறைந்த செலவில் இந்நிகழ்வை நடத்த இயலும். (அல்லது)
- சிறப்பு மாதமாக கருதப்படும் சூலை மாதத்தில், சிறப்பு மாரத்தான் நிகழ்வு ஒன்றினை நடத்தலாம். 'கூகுள் மீட்' வாயிலாக உரையாடிக் கொள்ளலாம்.
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:43, 16 மே 2024 (UTC)
- இந்த இரண்டிலுமே எனக்கு உடன்பாடு தான். மற்ற பயனர்களின் கருத்துகளுக்காகக் காத்திருப்போம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:40, 16 மே 2024 (UTC)
- மாரத்தான் நிகழ்வு நடத்தலாம். --சா. அருணாசலம் (உரையாடல்) 09:10, 19 மே 2024 (UTC)
- மாரத்தான் நிகழ்வு நடத்தலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 06:23, 21 மே 2024 (UTC)
முன்மொழிவு[தொகு]
ஆலமரத்தடி அறிவிப்பில், ஆதரவு தெரிவித்த @சா அருணாசலம், Sridhar G, Arularasan. G, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, and Balu1967: ஆகியோருக்கு நன்றி. இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள ஆதரவு, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இவற்றின் அடிப்படையில், முன்மொழிவு ஒன்றை விளக்குகிறேன்.
- ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்தப் பணிக்கான சிறப்பு மாதம் சூலை மாதம் ஆகும். எனவே சூலை 6 அன்று (சனிக்கிழமை) நேரடி தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை சென்னை நகரில் நடத்தலாம். தமிழ்நாட்டில் வாழும் பயனர்கள் 10 பேர் ஒன்றுகூடி இப்பணியைச் செய்யும் வகையில் திட்டமிடலாம்.
- நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதவர்கள் இணையம் வழியே இணைந்து இந்தத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
- சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள AU-KBC RESEARCH CENTRE அலுவலகத்தில் தொடர்-தொகுப்பு நிகழ்வை நடத்த அவர்களிடம் அனுமதி கேட்கலாம்.
- தேவைப்படும் நிதி உதவியை சி.ஐ.எஸ் அமைப்பிடம் கோரலாம்.
இந்த முன்மொழிவின் மீது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 21 மே 2024 (UTC)
- விருப்பம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:30, 21 மே 2024 (UTC)
- விருப்பம். -- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 10:15, 22 மே 2024 (UTC)
- விருப்பம்: நீங்கள் விரும்பியபடி சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி வளாகத்தில் நடத்த அனுமதி வாங்கிவிட்டேன். நிதி உதவியை உறுதி செய்துவிட்டு மேற்கொண்டு திட்டமிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 00:39, 23 மே 2024 (UTC)
@சா அருணாசலம், Sridhar G, Arularasan. G, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, Balu1967, சத்திரத்தான், and Neechalkaran: மேற்கொண்டு இங்கு உரையாடுவோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 23 மே 2024 (UTC)