விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாகச் சுமார் 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.
செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு, விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்த இந்தத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கிறோம்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு[தொகு]
எண் | திட்டங்கள் | இலக்கு | எட்டியது |
---|---|---|---|
1 | சிறப்புக் காலாண்டு (இரண்டாம் காலாண்டு: ஏப்ரல், மே, சூன்) | 182 கட்டுரைகள் | 42 கட்டுரைகள்* |
2 | சிறப்புக் காலாண்டு (நான்காம் காலாண்டு: அக்டோபர், நவம்பர், டிசம்பர்) | 300 கட்டுரைகள் | - |
- * நடப்புத் திட்டம்
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்[தொகு]
உள்ளடக்கத்திற்கான மூலம்[தொகு]
இப்போதிருக்கும் கட்டுரைகளின் உள்ளடக்கம் சுமார் 14 ஆண்டுகள் பழமையானவை. ஆங்கில விக்கிப்பீடியா என்பது முதன்மைத் திட்டம் என்பதாலும், உலகளவில் பலராலும் தொடர்ந்து இற்றை செய்யப்படுவதாலும், இப்போதிருக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை எடுத்து மொழிபெயர்ப்பு செய்யவேண்டும்.
கட்டுரை வடிவமைப்பு[தொகு]
- தகவற் பெட்டி இருத்தல் நல்லது
- முன்னுரை
- 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
- மேற்கோள்கள்
- உகந்த பகுப்புகள்
- உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்
- முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும் என்பதில்லை. குறைந்தபட்சம் 300 சொற்கள் இருக்க வேண்டும். (எண்ணிக்கைகளைக் கணக்கிட நீச்சல்காரனின் இந்தக் கருவி உதவலாம்.)
எளிய முறைக்கான பரிந்துரைகள்[தொகு]
பரிந்துரை 1:
- கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ளுதல்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமித்தல் (பதிப்பிடுதல்).
- அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்தல்.
பரிந்துரை 2:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, தனது மணற்தொட்டியில் உள்ளடக்கத்தை இட்டுக்கொள்ளுதல்.
- சிறு திருத்தங்களை மணல்தொட்டியில் செய்தல்.
- இறுதியாக மணல்தொட்டியிலுள்ள உள்ளடக்கத்தை கூகுள் கட்டுரையில் replace செய்தல். எடுத்துக்காட்டு: செயல் 1 & செயல் 2, செயல் 3
பரிந்துரை 3:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, நேரடியாக கூகுள் கட்டுரையில் overwrite செய்தல். எடுத்துக்காட்டு: மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து நேரடியாகவே overwrite செய்தல்
- அதன்பிறகு திருத்தங்களைச் செய்தல்.
- இந்த மூன்று பரிந்துரைகளின்படி செயல்பட்டால், முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு[தொகு]
- {{கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்}} வார்ப்புருவைக் கட்டுரைப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும்.
- கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.
- {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும்.
செயலாக்கம்[தொகு]
- கட்டுரைகளின் பட்டியல் - பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
- செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தலாம்.
- 46 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.
பங்களிக்க விரும்பும் பயனர்கள்[தொகு]
- - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 11 மார்ச்சு 2024 (UTC)
- - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 10:04, 13 மார்ச்சு 2024 (UTC
- - Magentic Manifestations--Magentic Manifestations (பேச்சு) 06:59, 31 மார்ச்சு 2024 (UTC)
- --மகாலிங்கம் இரெத்தினவேலு 16:23, 31 மார்ச்சு 2024 (UTC)
- --கு. அருளரசன் (பேச்சு) 13:38, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 15:10, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:50, 2 ஏப்பிரல் 2024 (UTC)
- --☤சி.செந்தி☤ (உரையாடுக) 05:20, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- --சா. அருணாசலம் (உரையாடல்) 01:45, 15 ஏப்பிரல் 2024 (UTC)
- --புதுவைபிரபு
- --Atchaya Jayabal
- --Sajantext (உரையாடல்)
கட்டுரைத் தலைப்புகளை பதிவு செய்தல்[தொகு]
கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் தலைப்புகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.
ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]
பங்களிப்பு விவரம்[தொகு]
நாள் வாரியாக[தொகு]
ஏப்ரல் 2024[தொகு]
மே 2024[தொகு]
நாள் | எண்ணிக்கை | கட்டுரைத் தலைப்புகள் |
---|---|---|
மே 4 | 1 | திரவ பெட்ரோலிய வாயு |
மே 7 | 1 | லலித் மோடி |
மே 10 | 1 | தானுந்து |
மே 11 | 1 | சூரிய மின்னாற்றல் |
மே 18 | 1 | புவிவெப்பச் சக்தி |
மொத்தம் | 5 | - |
குறிப்பு: செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யும் பயனர், அந்தக் கட்டுரையை முடித்துவிட்டதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடும் நாள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பயனர்கள் வாரியாக[தொகு]
வரிசை எண் | பயனர் | செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை |
---|---|---|
1 | மகாலிங்கம் இரெத்தினவேலு | 18 |
2 | ஸ்ரீதர். ஞா | 13 |
3 | Magentic Manifestations | 7 |
4 | பாலசுப்ரமணியன் | 5 |
5 | ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் | 2 |
6 | கு. அருளரசன் | 1 |
7 | Kanags | 1 |
- | மொத்தம் | 47 |
மேற்கோள் வழுவுள்ள பக்கங்களை செம்மைப்படுத்துதல்[தொகு]
- புலி - செய்தவர்: Magentic Manifestations