பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை இனங்காணப்பட்டு உடனடியாக நீக்கப்படும். (மேலும் காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை)
ஒருவர் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.
போட்டி காலம்: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012
பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ் - தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவையாக இருத்தல் வேண்டும். பின்வரும் வகை ஊடகங்கள் பதிவேற்றப்படலாம்
தமிழர் வாழிடங்கள் தொடர்பான படங்கள்
தமிழர், தமிழியல் தொடர்புடையோர் படங்கள்
தமிழர் மரபுச் சின்னங்களின் படங்கள்
தமிழ் நிறுவனங்களின் படங்கள்
தமிழர் நிலச்சூழல், உயிரினங்களின் படங்கள்
தமிழர் பாரம்பரியக் களங்கள் - கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் போன்றவற்றின் படங்கள்
தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள்
தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல், சடங்குகள், மற்றும் கிராமியக் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)
ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 அமெரிக்க டாலர்கள்
சிறப்புப் பரிசு: 150 அமெரிக்க டாலர்கள் (தமிழர் தொழிற்கலைகள் ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
பரிசு பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற ஆக்கங்கள் தமிழ் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிப்படுத்தப்படும்.
ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
பரிசுகள் பொதுமை கருதி அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டாலும், கையிருப்பு இந்திய ரூபாய்களில் உள்ளது. எனவே நாணய மாற்று விகித்தில் ஏற்படும் மாற்றங்களால் போட்டி முடிந்த பின் (மார்ச் 2012) வழங்கப்படும் பரிசுத் தொகையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.