மெலண்டரைட்டு
மெலண்டரைட்டு Melanterite | |
---|---|
இயற்கையில் மெலண்டரைட்டு | |
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | FeSO4·7H2O |
இனங்காணல் | |
நிறம் | பச்சை, வெளிர் பச்சை, பச்சை நீலம், நீல பச்சை, நிறமற்றது |
படிக இயல்பு | அரிதாக சமமான போலி எண்முக, பட்டகம் அல்லது அட்டவணை படிகங்கள் |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
பிளப்பு | {001} சரிபிளவு, {110} தனித்துவம் |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் முதல் ஒளிகசியும் வரை |
ஒப்படர்த்தி | 1.89 – 1.9 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.470 – 1.471 nβ = 1.477 – 1.480 nγ = 1.486 |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
மெலண்டரைட்டு (Melanterite) என்பது FeSO4·7H2O. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரடங்கிய பெரசு சல்பேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இரும்பை ஒத்த சால்காந்தைட்டு எனப்படும் தாமிர சல்பேட்டு கனிமம் என்றும் கருதப்படுகிறது. சிதெரோட்டில் கனிமத்தில் நீரிழப்பு ஏற்படுகையில் மெலண்டரைட்டு உருவாகிறது. மெலண்டரைட்டு ஓர் இரண்டாம் நிலை சல்பேட்டு கனிமமாகும். முதன்மை சல்பைட்டு தாதுக்களான பைரைட்டு மற்றும் மார்கசைட்டு போன்றவற்றின் ஆக்சிசனேற்ற வினையிலிருந்தும் புவி மேற்பரப்பு பகுதிகளிலும் பழைய நிலத்தடி சுரங்கப் பரப்புகளில் ஒரு சுரங்கப் படிவாகவும் மெலண்டரைட்டு தோன்றுகிறது.[2] ஈரப்பதமான காற்றுக்கு வெளிப்படும் நிலக்கரி மற்றும் லிக்னைட்டு அடுக்கிடை கோடுகளிலும், எரிமலை வாய்களை சுற்றியும் மெலண்டரைட்டு காணப்படுகிறது.[4]
1850 ஆம் ஆண்டு முதன் முதலில் மெலண்டரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[4]
காட்சியகம்[தொகு]
-
மெலண்டரைட்டு படிகக் கட்டமைப்பு
-
குப்ரிய மெலண்டரைட்டு