முதலாம் ஈழப்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ஈழப்போர்
ஈழப் போர் பகுதி
நாள் யூலை 23, 1983 – யூலை 29, 1987
இடம் இலங்கை
இந்தியாவினால் சமாதனம் பேசப்பட்டது, இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது
பிரிவினர்
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
ஜே. ஆர். ஜெயவர்த்தனா
டி. ஐ. வீரதுங்க
நலின் செனவிரத்தன
வேலுப்பிள்ளை பிரபாகரன்

முதலாம் ஈழப்போர் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப்போரின் ஆரம்ப நிலையாகும். 1970 முதல் இலங்கை அரசுக்கும் தமிழ் போராட்ட குழுக்களுக்குமிடையே பதட்டம் காணப்பட்டபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்தில் யூலை 23, 1983 அன்று தாக்கி 13 படையினர் கொல்லப்படும்வரை போர் முழு அளவில் வியாபித்திருக்கவில்லை. இத்தாக்குதலும் அதன் விளைவாக ஏற்பட்ட கலவரம் தெற்கில் கருப்பு யூலையாக மாற்றமடைந்தது முரண்பாட்டின் தொடக்கம் என பொதுவாக கருதப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஈழப்போர்&oldid=3958698" இலிருந்து மீள்விக்கப்பட்டது