மலேசியப் பிரதமர் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பிரதமர் துறை
Jabatan Perdana Menteri (JPM)
மலேசிய மரபுச் சின்னம்
அமைச்சு மேலோட்டம்
அமைப்புசூலை 1957; 66 ஆண்டுகளுக்கு முன்னர் (1957-07)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்பெர்டானா புத்ரா, மத்திய அரசு நிர்வாக மையம், 62502 புத்ராஜாயா
பணியாட்கள்33,802 (2018)
ஆண்டு நிதிRM 11,822,244,400 (2022 - 2023)
பொறுப்பான அமைச்சர்கள்
  • -, சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்
  • -, நாடாளுமன்றம் மற்றும் சட்டம்
  • -, சிறப்பு செயல்பாடுகள்
  • -, பொருளாதாரம்
  • -, மத விவகாரங்கள்
பொறுப்பான துணை அமைச்சர்கள்
  • -, சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்
  • -, நாடாளுமன்றம் மற்றும் சட்டம்
  • -, சிறப்பு செயல்பாடுகள்
  • -, பொருளாதாரம்
  • -, மத விவகாரங்கள்
அமைச்சு தலைமை
  • -, மத்திய அரசு தலைமைச் செயலாளர்
வலைத்தளம்www.jpm.gov.my

மலேசியப் பிரதமர் துறை (ஆங்கிலம்: Prime Minister Department; மலாய்: Jabatan Perdana Menteri (JPM); ஜாவி: جابتن ڤردان منتري) என்பது மலேசியாவின் மத்திய அரசின் அமைச்சகம் ஆகும். அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் சேவைகளும்; கொள்கை, சட்டம், ஒழுங்குமுறைகள் மூலமாக முறையாகச் செயல்படுத்தப் படுவதைக் கண்காணிப்பது மலேசியப் பிரதமர் துறையின் நோக்கம் ஆகும்.

இந்தத் துறைக்கு மலேசியப் பிரதமர் தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாகப் பிரதமர் துறை அமைச்சர்கள் உள்ளனர்.

மலேசியப் பிரதமர் துறையில்; மலேசியப் பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office), மலேசிய துணைப் பிரதமர் அலுவலகம் (Deputy Prime Minister's Office) மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிற அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

மலேசியப் பிரதமர் துறை ஜூலை 1957-இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பெர்டானா புத்ரா (Perdana Putra), புத்ராஜெயாவில் (Putrajaya) உள்ளது.[1]

கட்டமைப்பு[தொகு]

முன்பு இந்த மலேசியப் பிரதமர் துறை, பிரதமர் துறையின் பொது நிர்வாகம் (General Administration) என அழைக்கப்பட்டது.

  1. புத்தாக்கம் மற்றும் மனிதவள மேலாண்மைப் பிரிவு (Innovation and Human Resource Management Division);
  2. நிதிப் பிரிவு (Finance Division),
  3. வளர்ச்சிப் பிரிவு (Development Division),
  4. கணக்குப் பிரிவு (Accounts Division),
  5. மேலாண்மைச் சேவைப் பிரிவு (Management Services Division),
  6. உள் தணிக்கைப் பிரிவு (Internal Audit Division),
  7. பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு (Corporate Communications Unit),
  8. நிகழ்வுகள் மேலாண்மைப் பிரிவு (Events Management Division)
  9. சட்ட ஆலோசகர் அலுவலகம் (Legal Advisor Office Division)

என இத்துறை ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளது.[2]

அனைத்து ஒன்பது (9) பிரிவுகளும் மூத்த துணைப் பொதுச் செயலாளரிடம் (Senior Deputy Secretary-General) அறிக்கைகளைச் சம்ர்ப்பிக்கின்றன. இவருக்கு துணைப் பொதுச் செயலாளர் (நிதி மற்றும் மேம்பாடு) மற்றும் துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) ஆகிய இரு துணைப் பொதுச் செயலாளர்களால் உதவிகள் செய்யப் படுகின்றன.[3]

அமைப்பு[தொகு]

  • மலேசியா பிரதமர்
    • பிரதமர் துறை அமைச்சர்
      • பிரதமர் துறையில் துணை அமைச்சர்
        • மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்
          • மூத்த துணைப் பொதுச் செயலாளர்
            • மூத்த துணைப் பொதுச் செயலாளர் அதிகாரத்தின் கீழ்
              • சட்ட ஆலோசகர் அலுவலகம்
              • உள் தணிக்கை பிரிவு
              • 1 மலேசியா அரசு ஊழியர்கள் வீட்டு வசதி
              • பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு
              • ஒருமைப்பாடு அலகு
            • துணைப் பொதுச் செயலாளர் (நிதி மற்றும் வளர்ச்சி)
              • திட்ட அபிவிருத்தி பிரிவு
              • கணக்கு பிரிவு
              • நிதி பிரிவு
            • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
              • புதுமை மற்றும் மனித வள மேலாண்மை பிரிவு
              • மேலாண்மை சேவைகள் பிரிவு
              • நிகழ்வு மேலாண்மை பிரிவு

(29 சனவரி 2019 நிலவரப்படி)

பிரதமர் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்[தொகு]

[https://jpm.gov.my/ms/ மலேசியப் பிரதமர் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government Directory: Prime Minister's Department". Office of the Prime Minister of Malaysia. 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
  2. "Departments and Agencies under Prime Minister's Department". Prime Minister's Department. Archived from the original on 29 January 2019. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  3. "Committee under Prime Minister's Department". Prime Minister's Department. Archived from the original on 29 January 2019. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  4. "Jabatan dan Agensi di bawah JPM". Jabatan Perdana Menteri. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 இந்த நிறுவனம் பிரதமர் துறைக்கு சொந்தமானது; ஆனால் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை வழங்குகிறது.
  6. Darul Quran (DQ) and Malaysian Institute of Islamic Training (ILIM) are under the jurisdiction of this Department.
  7. Administration of all judicial courts, including Federal Court of Malaysia, Court of Appeal of Malaysia and High Courts of Malaysia are under the jurisdiction of this Office.
  8. Legal and Judicial Service Commission (SPKP) is included.
  9. It is also known as Secretariat for the Advancement of Malaysian Entrepreneurs (SAME).

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியப்_பிரதமர்_துறை&oldid=3961778" இலிருந்து மீள்விக்கப்பட்டது