மஞ்சள் பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் பட்டாணிக் குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பட்டாணிக் குருவி
பேரினம்:
மாக்லோலோபசு
இனம்:
M. holsti
இருசொற் பெயரீடு
Machlolophus holsti
(சீபோம், 1894)
வேறு பெயர்கள் [2]

பரசு கோல்சுடி

மஞ்சள் பட்டாணிக் குருவி (Yellow tit), தைவான் மஞ்சள் பட்டாணிக் குருவி அல்லது பார்மோசன் மஞ்சள் பட்டாணிக் குருவி (மாக்லோலோபசு கோல்சுடி) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.[2] இது மத்திய தைவானில் மட்டுமே காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழிடம் என்பது மாண்டேன் மிதமான காடுகள் ஆகும்.

இது ஒரு வரையறுக்கப்பட்ட வரம்பையும் சிறிய எண்ணிக்கையினையும் கொண்டுள்ளது. மேலும் பறவை வர்த்தகத்தால் ஏற்றுமதிக்குப் பெரிய அளவிலான பிடிப்பு காரணமாகக் குறைந்து வருவதாகத் தெரிகிறது. எனவே இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மஞ்சள் பட்டாணிக் குருவி முன்பு பரசு பேரினத்தில் உள்ள பல சிற்றினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2013-இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு வரலாற்றுப் பகுப்பாய்வு புதிய பேரினத்தின் ஒரு தனித்துவமான கிளையினை உருவாக்கியதை அடுத்து மாக்லோலோபசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[3][4]

இதன் நீளம் 13 செ. மீ. ஆகும். மஞ்சள் பட்டாணிக் குருவி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில், ஒரு முகட்டுடன் பின்புறம் கருப்பு நீல-சாம்பல் நிறத்தில் காணப்படும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Machlolophus holsti". IUCN Red List of Threatened Species 2016: e.T22711939A94313030. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711939A94313030.en. https://www.iucnredlist.org/species/22711939/94313030. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Parus holsti on Avibase பிழை காட்டு: Invalid <ref> tag; name "avibase" defined multiple times with different content
  3. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
  4. Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
  5. Brazil, Mark (2009). Birds of East Asia. A&C Black. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-7040-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பட்டாணிக்_குருவி&oldid=3946200" இலிருந்து மீள்விக்கப்பட்டது