பேச்சு:விமானம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: தமிழ் விக்கிப்பீடியாவில் Aircraft என்பதை வானூர்தி என தமிழாக்கம் செய்துள்ளோம். எனவே அனைத்து இடங்களிலும் வானூர்தி எனும் தனித்தமிழ்ச் சொல்லை பயன்படுத்த முயற்சி செய்கிறோம். இந்நிலையில், Aeroplane என்பதனை விமானம் என தமிழாக்கம் செய்து இக்கட்டுரை உள்ளது. விமானம் எனும் பகுப்பும் உள்ளது. இவை குறித்து உங்களின் கருத்துகளை அறிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:12, 26 மே 2024 (UTC)[பதிலளி]

//An aircraft category is defined by the International Civil Aviation Organization as a "classification of aircraft according to specified basic characteristics", for the purpose of personnel licensing. Examples of aircraft categories include aeroplanes, helicopters, gliders, or free balloons.// என்பதாக Aircraft category கட்டுரையில் விளக்கம் உள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:39, 26 மே 2024 (UTC)[பதிலளி]

@Paramatamil and செல்வா: உங்களின் கருத்துகள், பரிந்துரைகளை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:11, 26 மே 2024 (UTC)[பதிலளி]

ஏதோ ஆய்ந்தறிந்தவன்போல இதில் நான் கருத்துசொல்வது அதிகப்பிரசங்கித்தனம். என்றாலும் ஏர்கிராஃப்டை வான்கலம்/ன் என்றும் ஏரோபிளேனை வானூர்தி என்றும் அழைப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். வானூர்தியும் ஒரு வகை வான்கலம் என்பதாக. என்ன, வான்கலத்தையும் விண்கலத்தையும் மக்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது. (மற்றபடி விமானம் என்பதை புஷ்பக விமானம், கோயில் விமானம் போன்ற சிறப்பான பயன்பாடுகளுக்காக குறுக்கிக்கொள்ளலாம். போர்விமானம் போல அதிகம் பழகிவிட்ட இடங்களில் மட்டும் சற்று திகட்டல் ஏற்படும்) Paramatamil (பேச்சு) 16:45, 28 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விமானம்&oldid=3978658" இலிருந்து மீள்விக்கப்பட்டது