பேச்சு:நரம்புத் தொகுதி
முண்ணாண் என்பது முள் நாண் என்பதன வடிவம் என்றாலும், முள்ளெளும்பு என்னும் முதுகெலும்புக்குள் உள்ள நரம்புகள் என்னும் பொருள் தருமா? முண்ணாண் என்பது முள்ளுடைய நாண் என்பது போன்ற பொருள் தரும் அல்லவா? நாணில் முள் இல்லைத் அல்லவா? தண்டுவடம் என்பது தமிழ்நாட்டில் பரவலாக வழங்கும் பெயர். இதில் வடம் என்பது கற்றையாக உள்ள நரம்பு நாண்கள் உள்ளதை நன்கு சுட்டும். தண்டு என்பது முதுகந்தண்டு என்று குறிப்பிடப்படும், முதுகெலும்பு அல்லது முள்ளெலும்பு அடுக்கைக் சுட்டும். முண்ணாண் என்பதைவிட தண்டுவடம் என்றே கூறலாம் என நினைக்கிறேன். --செல்வா 13:25, 16 மே 2009 (UTC)