பேச்சு:கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

LATIN WORDS OF TAMIL ORIGIN Radius, a rod, staff; a spoke of a wheel; a semi-diameter, radius of a circle; in anatomy, the radius, the exterior bone of the fore-arm; of light, a beam or ray of any shining object, of the sun. ஆரை-ஆரக்கால் Tm.a’rai, rod, staff; s spoke of a wheel; a semi-diameter, radius. So, Tm. Rt. aria>by aphesis>l. rt. rai + d, infix>radi. கனஞ்சப்பட்டி சிதம்பர ஞானகிரி நாடார்- தொகுப்பு பற்றி- அவர் இறப்பு பற்றி தெரியவில்லை. அவர் சென்னை அண்ணாநகர் ஆர் வி நகர் பகுதியில் என் பள்ளி (11 ம் வகுப்பு 1985) வகுப்பு தோழர்(அவர் தந்தைக்கு அறிமுகமானவர் அவர்கள் மிகவும் ஏழை, தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள்) வீட்டில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அடிக்கடி என் நண்பரை பார்க்க செல்லும்போது ஒரு நாள் இவர் ஆய்வைபற்றிக் கேட்டோம் அப்போது கொஞ்சமும் தயங்காமல் அவற்றை விளக்கினார். அவர் ஆய்வுத் தாளகளை வரிசைப்படுத்துவது போன்ற சில உதவிகளை செயுவோம். மிக செல்வந்தராக இருந்த ஒருவர் தமிழுக்காக கூவம் கரையோரம் கொசுக்களின் ஊடே வாழந்து தமிழ் ஆராயச்சி செய்தபோது நெஞ்சம் நெகிழ்ந்த்து.அவருடைய அன்றாடம் உண்ணும் உணவு 1 பன், அரை டம்பளர் பால், சிறிது உடைத்த கடலை( ஒரு வேளை இரவு மட்டும்). இந்த கலோரியில் அவர் இரண்டு மூன்று கிலோ மீட்டர் தனியாக அச்சக பணிகளை (மவுண்ட் ரோடு)முடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடுவரை நடந்தே வருவார்.காலில் செருப்பு அணியமாட்டார். காது சரியாக கேட்காது அந்த கருவியை ஒருவர் அன்பளிப்பாக பின்னாளில் அளித்தார். பூத கண்ணாடி மூலம்தான் பார்க்கமுடியும் அந்த மூக்கு கண்ணாடி பவர் குறைவு.அவர் உடை வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை.(உயரம் சராசரியைவிட சற்று அதிகம்). அதன் பிறகு நான் இல்லம் மாறிவிட்டேன் அந்த (வகுப்பு) நண்பரின் தொடர்பு முறிந்ததால் இவரைப்பற்றி அறியும் வாய்ப்பு இழந்தேன். அவர் கொடுத்த இரண்டு பத்தகங்களை பத்திரப்படுத்திவைத்துள்ளேன். அதற்கு பிறகு என்ன ஆனார் என்று தெரியவல்லை. அவர் தொலைக்காட்சி நேர்காணலுக்கு எங்கள் உதவியுடன் சென்றார். அங்குள்ளவர்களிடம் இவர்கள்தான் என் சீடர்கள் மற்றும் நண்பர்கள் என்று எல்லோரிடமும் அறிமுகம் செய்துவைத்தார். வயதில் சிறியவர்கள் ஆனாலும் மறியாதையாக அழைப்பார். சர் ஏ டி பன்னீர் செல்வம் கட்டுரையை எழுத இவரே தூண்டுகோள். நீங்கள் வைத்திருக்கும் பெயர் (என் பெயர் பூ பன்னீர் செல்வம்)யாருடையது அவர் புகழ் தெரியுமா? என்று கேட்டு அவரை பற்றி சொன்னார். அப்பொழுதுதான் பன்னீர் செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள நூலகம் சென்று அவர் வரலாரை அறியலானேன். (என் தந்தை சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர் தான் இருப்பினும் இவர் வரலாற்றைப்பற்றி அறிய நான் அக்கரை காட்டவில்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....குறள் சரி தான்.) K C A ஞானகிரியின் குடும்பத்தைப் பற்றி தெரியாது யாரும் அவரை பார்க்க வரமாட்டார்கள். இவர் ஆராய்ச்சி என்ற பேரில் சொத்துக்களை அழித்து விட்டதாக நினைத்து அவர் குடும்பத்தினர் இவரை தனிமை படுத்திவிட்டனர் என்றும் சொத்துக்களை பலர் அபகரித்துக்கொண்டார்கள் என்றும் அப்போது கூறுவார்கள்.(அவர்களை பற்றி தெரியவில்லை) அவர் அனாதை போல்தான் வாழந்தார் அன்று எனக்கு 15 வயது என்னால் பொருள் உதவியாக எதையும் கொடுக்கும் நிலையில் நான் வாழவில்லை.அவர் ஆராய்ச்சியை முழுவதும் அறிந்துகொள்ளுமளவுக்கு ஆற்றல் பெற்றவனல்ல. என் குடும்பமும் ஏழ்மைதான் அதுவும் (இப்பொழுதும் இப்படிதான்) நான் அன்று மாணவன். அவரைபற்றி யாருக்காவது தெரிந்திருந்தால் தொகுத்தால் நன்றி பாராட்டுவேன். தனக்காக எதையும் சேர்க்க விரும்பாத தமிழ் மேதையை இக்கட்டுரை மூலம் சிறிது பெருமை படுத்த நான் பயன்பட்டேன் என்ற பெருமை போதும். நன்றியுடன் --செல்வம் தமிழ் 09:02, 25 ஜனவரி 2009 (UTC)--செல்வம் தமிழ் 04:02, 7 பெப்ரவரி 2009 (UTC)