பேச்சு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன், இந்த நிறுவனமும் தனிநாயகம் அடிகள் ஆரம்பித்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் ஒன்று தானா?--Kanags 00:24, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

அப்படி என்றுதான் நினைக்கின்றேன். தனிநாயகம் அடிகளுடன் பிறரும் அமைப்பாளர்களாக இருந்துள்ளார் என்று தெரிகின்றது. --Natkeeran 00:32, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

இரண்டும் ஒன்றென்றால் என்னிடம் இவ்வமைப்புப் பற்றி மேலதிக தகவல்கள் உள்ளன. தேடிப்பார்க்கிறேன். சென்ற மாதம் மலேசியாவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 10வது உலகத் தமிழ் மாநாட்டை நடாத்தியது. இந்த அமைப்புக் குறித்தும் ஒரு கட்டுரை எழுதி இப்பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags 00:47, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

இதையும் பார்க்க: பகுப்பு:தமிழர் அமைப்புகள்.--Natkeeran 00:49, 11 ஆகஸ்ட் 2007 (UTC)
இரண்டு அமைப்புகளும் வெவ்வேறு.--Kanags \உரையாடுக 13:12, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
சற்றுக் குளப்புகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவது இல்லையா? உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வேறு அமைப்பா நடத்துகிறது? இப்போ உலகத் தமிழ்ச் சங்கம் என்ற ஒன்றும் உள்ளதே. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேறு. அது அரச சாரா அமைப்பு. ஆனால் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாட்டு அரசின் ஓர் அமைப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாட்டு அரசின் அமைப்பு. http://www.ulagatamilsangam.org/a/ வலைத்தளத்தில் உலகத் தமிழ்ச் சங்கமே உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடத்துவதாக கூறுகிறார்கள் !!1 பெயர் மாற்றப்பட்டுள்ளது. தமிழாராய்ச்சி என்று இல்லாமல் தமிழ் என்று மட்டும் இருக்கிறது. --Natkeeran (பேச்சு) 14:02, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
இரண்டுமே வெவ்வேறு. தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்துவது தனிநாயகம் அடிகளின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழாராய்ச்சி நிறுவனம். இதற்கு ஆங்கிலத்தில் International Association of Tamil Research என்று பெயர். இதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது பற்றி பயனர் விருபாவிடம் மேலதிக தகவல்கள் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 14:12, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நீங்கள் தந்துள்ள இணையதளம் குழப்பமானது. சர்ச்சைக்குரியது.--Kanags \உரையாடுக 14:14, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
http://www.thehindu.com/features/metroplus/society/the-glory-of-tamil/article7689140.ece பார்க்க. எனது கணிப்பில், அரச ஆதரவு கருதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் உள் அமைப்பாக மாற்றப்பட்டு இருக்கின்றது என்று நினைக்கிறேன். அது அரச அமைப்பு, அல்லது அரச ஆதரவில் பெரிதும் தங்கி இருக்கும் அமைப்பு. ஆய்வாளர்கள் வெளியே போய்விட்டார்கள், அரசியல்வாதிகளே பெரிதும் குழுக்களில் உள்ளார்கள். --Natkeeran (பேச்சு) 16:22, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
Kanags ஆமாம். ஆங்கிலப் பெயர் வேறாக இருக்கின்றது. International Institute of Tamil Studies. International Association of Tamil Research இற்கான வலைத்தளம் எதாவது உண்டா? --Natkeeran (பேச்சு) 16:51, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
Kanags. இந்தக் கட்டுரையில், "இரண்டாவதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குப் போட்டியாக மற்றொரு உலகத் தமிழ் அமைப்பைத் தோற்றுவிக்கும் ஆழமான உள்நோக்கமும் இத்திட்டத்தில் அடங்கியிருக்கிறது." என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் நீட்சியாகவே உலகத் தமிழ்ச் சங்க வலைத்தளத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைக் கோரி இருக்கிறார்கள் என்று கருத முடிகிறது. --Natkeeran (பேச்சு) 18:34, 2 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]