பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்கோர் உடன்படிக்கை 1874 (ஆங்கிலம்: Pangkor Treaty of 1874; மலாய்: Perjanjian Pangkor) என்பது ஐக்கிய இராச்சியத்திற்கும் பேராக் சுல்தானுக்கும் இடையே 20 சனவரி 1874-இல் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். பேராக் கடற்கரையில், புளூட்டோ (Pluto) எனும் பிரித்தானிய நீராவிக் கப்பலில் அந்த உடன்படிக்கை கையெழுத்தானது.

மலாய் மாநிலங்களின் வரலாற்றில் இந்த உடன்படிக்கை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கை மலாய் ஆட்சியாளர்களின் மீதான பிரித்தானியக் கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்கியது; மற்றும் மலாயாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு வழி வகுத்துக் கொடுத்து. இந்த உடன்படிக்கைக்கு அப்போதைய நீரிணை குடியேற்றங்களின் தலைவர் ஆண்ட்ரூ கிளார்க் (Andrew Clarke) என்பவர் ஏற்பாடு செய்தார். இந்த உடன்படிக்கை இரண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது: முதலாவது: லாரூட் போர்; இரண்டாவது பேராக் மாநிலத்தின் சுல்தானியத் தலைமைத்துவம்.[1]

பொது[தொகு]

19-ஆம் நூற்றாண்டில் பேராக் மாநிலம் ஒரு முக்கியமான ஈய உற்பத்தியாளராக இருந்தது. அதுவே பேராக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த நேரத்தில் பிரிட்டன் ஏற்கனவே பினாங்கு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் மாநிலங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Khoo Kay Kim, and Andrew Clarke, "The Pangkor Engagement of 1874." Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 47.1 (225) (1974): 1-12 online.

மேலும் படிக்க[தொகு]

  • Kim, Khoo Kay, and Andrew Clarke, "The Pangkor Engagement of 1874". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 47.1 (225) (1974): 1–12 online.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி&oldid=3995940" இலிருந்து மீள்விக்கப்பட்டது