பகுப்பு பேச்சு:நீர்நிலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் நீர்நிலைப்பெயர்கள்[தொகு]

நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். - தொ.பரமசிவன்.[1]

இவற்றில் பல இன்றும் வழக்கில் உள்ளன. செக்கானூரணி, பேராவூரணி, கண்ணனேந்தல், பெரியகுளம், புல்லூத்து (ஊற்று) ஆகியன நானறிந்த ஊர்ப்பெயர்கள். ஏரலில் சுனை உள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் பல கண்மாய்கள் உள்ளன, எங்கள் ஊரிலேயே தென்கரைக் கண்மாய் வடகரைக் கண்மாய் என்று உள்ளன. -- சுந்தர் \பேச்சு 15:05, 30 ஜனவரி 2008 (UTC)
மதுரைப்பக்கம் தான் இப்பெயர்கள் அதிகம் போலிருக்கிறது. இந்த இணைப்பைப் பாருங்கள் ஏரி, குளம், ஏந்தல் எல்லாம் வருகிறது. கடச்சனேந்தல், அந்தனேரி, செம்பகுளம், கொடிகுளம், மருதகுளம். தாங்கல் [2] (நன்கறியப்பட்ட இடம்: வேடந்தாங்கல்) என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். --சிவகுமார் \பேச்சு 09:02, 31 ஜனவரி 2008 (UTC)
நீங்கள் சொன்ன ஊர்கள் தவிரவும் பல உள்ளன: மாடக்குளம், தத்தனேரி. நானே இதுவரை எண்ணிப் பார்த்ததில்லை. இணைப்பிற்கு நன்றி சிவா. :) -- சுந்தர் \பேச்சு 09:12, 31 ஜனவரி 2008 (UTC)

ஊர்ப்பெயர்கள்: தலைவாய், வாய்த்தலை[தொகு]

  • ஆற்றில் ஓடும் நீர் ஒரு கால்வாய் மூலம் பிரிந்து, வளைந்து மீண்டும் ஆற்றில் சேர்க்கப்படும். இப்படி வளைகின்ற இடத்தில் ஒரு வாய் ஏற்படுத்தி பாசன வாய்க்கால் உருவாக்கப்படும். இந்த அமைப்பு தலைவாய் அல்லது வாய்த்தலை எனப்படும். (காட்டு:பேட்டவாய்த்தலை, கரூர் அருகே காவிரிப்பகுதியில் உள்ள ஊர்)[3].


கிணறு..[தொகு]

கேணி, கிணறு, வாவி, துரவு என்ற சொற்கள் கிணற்றைக் குறிப்பன. இதில் துரவு என்பது அளவில் பெரிய, பாசனத்திற்குப் பயன்படும் கிணறு. இன்று கூட ஒருவரின் பொருளாதார நிலையைக் குறிக்க "தோட்டம் துரவு உள்ளவர்" என்ற வழக்குச் சொல் உள்ளது.[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. திண்ணை இதழில்
  2. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=tamil-lex&page=1824&display=utf8
  3. பக் 33, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87371-07-2. {{cite book}}: Check date values in: |date= (help)
  4. பக் 80, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87371-07-2. {{cite book}}: Check date values in: |date= (help)