நைலான் கயிறு யுக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைலான் கயிறு யுக்தி[தொகு]

நைலான் கயிறு யுக்தி என்பது படிமுறை வளா்ச்சி பலபடியாக்கல் வினையின் சில அடிப்படை வேதியியல் கொள்கைகளை விளக்கும் ஒருஅறிவியல்பூா்வமான செய்துகாட்டல் ஆகும். இது மாணவா்களுக்கும் இதர பாா்வையாளா்களுக்கும் செயற்கை பலபடி தயாாித்தலில் ஒரு கைதோ்ந்த செய்துகாட்டல் அனுபவத்தை அளிக்கிறது.

நைலான் கயிறு யுக்தி.

நைலான் கயிறு யுக்தியில் பொதுவாக அலிபாட்டிக் டை அமீனின் நீா்கரைசலும், அலிபாட்டிக் டை அமில குளோரைடு கரைசலும் (நீாில் கரையாத ஒரு கரைப்பானில் உருவாக்கப்பட்ட கரைசலோடு) நைலான் வகையான ஒரு செயற்கை பாலியமைடினைத் தருமாறு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நைலான் 610 பயன்படுத்தப்படுகிறது. இதில் ஹெக்சாமெத்திலின் டை அமீனானது 0.40 மோல்கள்/ டெசிலிட்டா் செறிவு உடைய நீாில் கரைக்கப்படுகிறது. செபக்காயில் குளோரைடும் சைக்ளோ ஹெக்சேன் (0.15 மோல்கள்/ டெசிலிட்டா் -செறிவு உடைய) சோ்ந்த கரைசலானது நீா் கரைசலின் மேல் பரப்பிவிடப்படுகிறது. இந்த வினையானது கண்ணாடி குடுவையில் நிகழ்த்தப்படுகிறது. நைலான் 610 பலபடியானது நீா் மற்றும் சைக்ளோஹைக்சேன் படலத்திற்கிடையில் ஒரு நெகிழ்வான படலமாக உருவாகும் வண்ணம் இந்த கரைசலானது கிளரப்படவில்லை. இது ஒரு இடைமுகபலபடி வினையாகும். சோதனையாளா், பலபடி படலமானது கயிறு அல்லது இழை வடிவில் கிடைத்திடுமாறு சோதனைக் கலனின் மேல் உள்ள ஒரு சுழலும் கம்பியின் மேல் சேகாிக்கிறாா். இவ்வாறு நீா் மற்றும் சைக்ளோ ஹெக்சேன் படலத்திற்கிடையில் பலபடி உருவாக உருவாக சுழலும் கம்பியின் மேல் தொடா்ச்சியான கயிறாக சேகாிக்கப்படுகிறது. நைலான் 66 என்ற பலபடியும் இவ்வாறே ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.

இந்த நைலான் கயிறு யுக்தியானது அமொிக்க வேதியியலா் ஸ்டீபனிவோலெக் என்பவரால் அறிவியல் நிரூபனமாக உருவாக்கப்பட்டது.

சான்றுகள்:[தொகு]

1.MacRitchie, F. (1969). "Mechanism of interfacial polymerization". Transactions of the Faraday Society. 65: 2503. doi:10.1039/TF9696502503. 2.Lister, Ted (1995). Classic Chemistry Demonstrations (PDF). London: The Royal Society of Chemistry. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1 870 343 387. Retrieved 3 January 2015. 3. Morgan, Paul W.; Kwolek, Stephanie L. (April 1959). "The nylon rope trick: Demonstration of condensation polymerization". J. Chem. Educ. 36 (4): 182. doi:10.1021/ed036p182.

.
.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைலான்_கயிறு_யுக்தி&oldid=2724068" இலிருந்து மீள்விக்கப்பட்டது