நா. நாச்சிமுத்து
நா. நாச்சிமுத்து (N. Nachimuthu ) (2 சூலை 1926 - 21 மே 2016) ஒரு தமிழ்நாட்டு அரசியலர், வேளாண் ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த இவர், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினராக 1967 முதல் 1976 வரை பணியாற்றினார்.
தொடக்க வாழ்க்கை[தொகு]
இன்றைய திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் உள்ள தேவத்தூரில் 2 சூலை 1926 அன்று பழனியம்மாள்-நாச்சிமுத்து இணையருக்கு மகனாகப் பிறந்தார் நாச்சிமுத்து.
கல்வி[தொகு]
பள்ளிக் கல்வியினை பழநி நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளியிலும் பயின்றார்
அரசியல்[தொகு]
இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1971 | ஒட்டன்சத்திரம் | திமுக | 40,845 | 58.99[2] |
1967 | ஒட்டன்சத்திரம் | திமுக | 39,817 | 55.55[3] |
மறைவு[தொகு]
முதுமை காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கித் தன் வளர்ப்பு மகன் வள்ளுவன் வீட்டில் வாழ்ந்துவந்த நாச்சிமுத்து, 21 மே 2016 அன்று காலமானார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 237.
{{cite book}}
: More than one of|at=
and|pages=
specified (help); Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: location (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Akilan, Mayura (2016-05-21). "ஒட்டன்சத்திரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ நாச்சிமுத்து காலமானார்". https://tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-17.
{{cite web}}
: External link in
(help)|website=