தொல்லியல் துறையில் கணினி பயன்பாடுகள் மற்றும் அளவு முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் துறையில் கணினி பயன்பாடுகள் மற்றும் அளவு முறைகள் (Computer Applications and Quantitative Methods in Archaeology)' என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகளை ஒன்றிணைக்கும் ஓர் உலகளாவிய அமைப்பாகும். இந்தத் துறைகளுக்கிடையேயான தொடர்பை ஊக்குவித்தல், இத்துறையில் தற்போதைய வேலைகள் பற்றிய ஆய்வை வழங்குதல், விவாதித்தல் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைத் தூண்டுதல் ஆகியவை இவ்வமைப்பின் நோக்கங்களாகும். இதன் பன்னாட்டு அமைப்பு, அதன் உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டங்களை, 1970 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்து வருகிறது. இப்போது உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிஞர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகமாக வளர்ந்துள்ளது. இதன் உறுப்பினர்கள் பல தேசிய அளவு அத்தியாயங்களையும், சிறப்பு ஆர்வக் குழுக்களையும் உருவாக்கினர் [1] அமைப்பின் பன்னாட்டுப் பிரிவு, வருடாந்திர நடவடிக்கைகள் [2] மற்றும் தொல்லியல் துறையில் கணினி பயன்பாடுகளின் இதழ் [3] .ஒன்றையும் வெளியிடுகிறது

வரலாறு[தொகு]

தொல்லியல் துறையில் கணினி பயன்பாடுகள் மற்றும் அளவு முறைகள் அமைப்பு 1970 ஆம் ஆண்டுகளில் ஒரு சிறிய குழுவாக ஆரம்பிக்கப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கணிதவியலாளர்களால் கணினி பயன்பாடுகளில் ஆர்வமுள்ளவர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். ஐக்கிய இராச்சியத்தில் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. முதல் மாநாடு 1973 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1992 ஆம் ஆண்டு முதல் மாநாடுகள் ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே நடைபெற்றன. படிப்படியாக, தொல்லியல் துறையில் கணினி பயன்பாடுகள் மற்றும் அளவு முறைகள் அமைப்பு ஒரு பெரிய பன்னாட்டு சமூகத்தில் வளர்ந்தது [1] .

தற்போதைய பன்னாட்டு மாநாடு[தொகு]

தற்போதைய பன்னாட்டு மாநாடு 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் ஆக்சுபோர்டு நகரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CAA History". caa-international.org. 2012. பார்க்கப்பட்ட நாள் 8 May 2022.
  2. "Proceedings". caa-international.org. 2011. பார்க்கப்பட்ட நாள் 8 May 2022.
  3. "The Journal of Computer Applications in Archaeology (JCAA)". caa-international.org. 2018. பார்க்கப்பட்ட நாள் 8 May 2022.
  4. "CAA 2022 Oxford iNside Formation". caa-international.org. 2022. பார்க்கப்பட்ட நாள் 8 May 2022.