தப்ரபேன் தீவு

ஆள்கூறுகள்: 5°58′04″N 80°25′32″E / 5.96778°N 80.42556°E / 5.96778; 80.42556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தப்ரபேன் தீவு
புவியியல்
அமைவிடம்இலங்கை
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்

தப்ரபேன் தீவு (Taprobane Island) இலங்கையில் வெலிகமை பட்டினத்துக்கு அருகில் உள்ள சிறியதொரு பாறைத் தீவாகும். முற்காலத்தில் இது கல் தூவ (கல் தீவு) என்றழைக்கப்பட்டது.[1] இது தனியாருக்குச் சொந்தமானது. பண்டைக் காலத்தில் இலங்கையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல்லே இத்தீவுக்குப் பெயரிடப் பயன்பட்டிருக்கிறது. இத்தீவு இரண்டரை ஏக்கர் பரப்பளவையே கொண்டுள்ளது.[2]

இத்தீவு முன்னர் பிரான்சு நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்த அந்நாட்டு இளவரசர் டி மௌனே என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.[3] அவர் வெலிகமை பட்டினம் மீதும் அதன் அழகிய கடற்கரை மீதும் மிகுந்த அவாவுற்றதால், இத்தீவில் ஒரு இல்லத்தைக் கட்டி அதிலேயே வாழ்ந்து வந்தார். அவருக்குப் பின்னர், இத்தீவு அமெரிக்க எழுத்தாளரான பவுல் பௌல்சு என்பவருக்கு உரித்தாயிற்று.

டச்சு எழுத்தாளரான பீட்டர் டென் கூப்பன் 1984 இல் தம் நாட்டில் கலக நிலை ஏற்பட்டிருந்த போது ஒரு மாதமளவில் தங்கியிருந்தார். பின்னர் அவுசுதிரேலியப் பாடலாசிரியரும் பாடகருமான கைலீ மினோகு இத்தீவில் தங்கியிருந்த போது, இத்தீவின் அழகினாற் கவரப்பட்டு, "தப்ரபேன் (அசாதாரண நாள்)" என்ற பாடலை இயற்றினார்.[4]

இத்தீவு பல்வேறு விளம்பரங்களுக்கும் ஹொலிவூட் படங்களுக்கும் களமாக இருந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. Ondaatje, Sir Christopher The Count haunts Taprobane,The Sri Lankan Anchorman, Toronto
  2. The Island comprises 2 ½ acres of sheer tropical fantasy with nothing between it and the South Pole.
  3. Maugham, Robin Search For Nirvana, W.H.Allen, London 1975, p151
  4. Top 10 private island holidays for private jet travellers, Jack Lockyer Accessed 2015-10-16

இலக்கியம்[தொகு]

  • William Warren, Jill Gocher (2007). Asia's legendary hotels: the romance of travel. Singapore: Periplus Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7946-0174-4.
  • Kim Inglis, Jacob Termansen, Pia Marie Molbech (2004). cool hotels: india, maldives, sri lanka. Singapore: Periplus Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0173-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளித் தொடுப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்ரபேன்_தீவு&oldid=3582029" இலிருந்து மீள்விக்கப்பட்டது