சுரபி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரபி
வகைஇந்திய கலாச்சாரப் பத்திரிகை நிகழ்ச்சி
உருவாக்கம்சித்தார்த் கக்
இயக்கம்அபிலாஷ் பட்டாச்சர்யா[1]
வழங்கல்சித்தார்த் கக், ரேணுகா சகானே
முகப்பு இசைஎல். சுப்பிரமணியம்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்9
அத்தியாயங்கள்415 [2]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சித்தார்த் காக்
தயாரிப்பு நிறுவனங்கள்சினிமா விஷன் இந்தியா
ஒளிபரப்பு
அலைவரிசை
ஒளிபரப்பான காலம்1990 (1990) –
2001 (2001)

சுரபி (Surabhi) என்பது ரேணுகா சகானே மற்றும் சித்தார்த் கக் ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்ட ஒரு இந்தியக் கலாச்சாரப் பத்திரிகை நிகழ்ச்சியாகும். இது 1990 முதல் 2001 வரை 1991 இல் ஒரு வருட இடைவெளியுடன் ஒளிபரப்பப்பட்டது.[3] இது ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திற்கு மாற்றப்பட்டது.[4] காக்கின் மும்பையைச் சேர்ந்த சினிமா விஷன் இந்தியா என்றா தயாரிப்பு நிறுவனம் இந்தியக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சியைத் தயாரித்தது. இந்த நிகழ்ச்சி இந்தியாவின் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்ட கலாச்சாரத் தொடராகும். மேலும் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்றதற்காக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

வரலாறு[தொகு]

இந்நிகழ்ச்சிக்கான தலைப்பு இசையை இந்திய இசையமைப்பாளரும் பாரம்பரிய வயலின் கலைஞருமான எல். சுப்பிரமணியம் இசையமைத்தார். இந்திய கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நீண்ட காலமாக இதற்கு நிதியுதவி அளித்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அமுல் சுரபி என்றும் பெயரிடப்பட்டது.[5]

பார்வையாளர்களின் பங்கேற்புக்காக வாராந்திர வினாடி வினா நடத்தப்பட்டதும் இதன் பிரபலத்திற்கு ஒரு காரணமாகும். அந்த நேரத்தில், செல்லிடத் தொலைபேசி மற்றும் இணையம் இந்தியாவில் பரவலாக இல்லை. பார்வையாளர்கள் 15 பைசா அஞ்சலட்டையை பயன்படுத்தி தங்கள் பதில்களை அனுப்புவார்கள். லிம்கா சாதனைகள் புத்தகத்தின் கூற்றுப்படி, ஒரே வாரத்தில் 14 லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் என்ற அளவில் இந்த நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக உயர்ந்த ஆவணப்படுத்தப்பட்ட பதிலைப் பெற்றது. இத்தகைய போட்டிகளில் பங்கேற்பதற்காக தலா 2 ரூபாய் விலையில் "போட்டி அஞ்சலட்டைகள்" என்று அழைக்கப்படும் வெவ்வேறு வகை அஞ்சலட்டைகளை வெளியிட இந்திய அஞ்சல் துறை கட்டாயப்படுத்தப்பட்டது.[6]

1990களில், சுரபி ஒரு முக்கிய நிகழ்ச்சியாக மாறியது. மேலும் “இந்தியக் கலாச்சாரத்தின் நீளத்தையும் அகலத்தையும் பிரதிபலிக்கும் சிறந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று” என்று அறியப்படுகிறது.[7] அதைத் தொடர்ந்து, போர்ட் அறக்கட்டளையின் உதவியுடன் சுரபி அறக்கட்டளையை கக் நிறுவி கலாச்சாரக் கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abhilash Bhattacharya | Abhilash Bhattacharya India | Abhilash Bhattacharya of Ujjain". Archived from the original on 15 September 2012. பார்க்கப்பட்ட நாள் 15 March 2011.
  2. "Decade of Surabhi". Surabhi.
  3. Bhatt, Shephali (2 September 2017). "The unplanned glory of Surabhi". ETBrandEquity.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-10.
  4. "Back with a new look". தி இந்து. 23 February 2008. Archived from the original on 11 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 February 2011.
  5. "Television Shows". Amul TV.
  6. "The fragrance of Surabhi"
  7. "Cultural tales". Indian Express. 21 Jul 2010. http://www.indianexpress.com/news/cultural-tales/649533/0. "Cultural tales".
  8. "Glorifying India's diverse culture on the celluloid screen". Indian Express. 18 May 2002. http://cities.expressindia.com/fullstory.php?newsid=17951. "Glorifying India's diverse culture on the celluloid screen".

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]