சிவானந்தா காலனி
சிவானந்தா காலனி Sivananda Colony | |
---|---|
ஆள்கூறுகள்: 11°01′21″N 76°57′23″E / 11.022500°N 76.956500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
ஏற்றம் | 453 m (1,486 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641012 |
தொலைபேசி குறியீடு | +91422xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு, சாய்பாபா காலனி |
மாநகராட்சி | கோயம்புத்தூர் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | பி. ஆர். நடராஜன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | வானதி சீனிவாசன் |
இணையதளம் | https://coimbatore.nic.in |
சிவானந்தா காலனி (Sivananda Colony) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
அமைவிடம்[தொகு]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவானந்தா காலனி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'21.0"N 76°57'23.4"E (அதாவது, 11.022500°N 76.956500°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்[தொகு]
கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், கணபதி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், பீளமேடு, சாய்பாபா காலனி ஆகியவை சிவானந்தா காலனிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து[தொகு]
சாலைப் போக்குவரத்து[தொகு]
கோயம்புத்தூரில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை சிவானந்தா காலனி வழியாகச் செல்கின்றன.
தொடருந்து போக்குவரத்து[தொகு]
சிவானந்தா காலனியிலுள்ள கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் தரம் உயர்த்தப்பட்டு கோவையின் இரண்டாவது சந்திப்பு தொடருந்து நிலையமாகத் திகழ வேண்டுமென, தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரால், மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.[2] 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம், சிவானந்தா காலனியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலுள்ளது.
வான்வழிப் போக்குவரத்து[தொகு]
இங்கிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், தொழிலதிபர்கள் அதிகம் வந்து செல்லுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கல்வி[தொகு]
பள்ளி[தொகு]
இங்குள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மாணவர்களின் கல்வி மற்றும் செயல்திறன் ஊக்கத்திற்கு பேருதவியாக இருக்கிறது.
ஆன்மீகம்[தொகு]
கோயில்[தொகு]
இங்குள்ள கற்பக விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]
அரசியல்[தொகு]
சிவானந்தா காலனியானது, கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி. ஆர். நடராஜன் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Tin̲amaṇi vairavil̲ā āṇṭu malar, 1934-1994. Intiyan̲ Ekspiras. 1994.
- ↑ "கோவை ரயில்வே கோட்டம்: வானதியின் புதிய கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு…". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-11. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Arulmigu Karpaga Vinayakar Temple, Sivananda Colony, Coimbatore - 641012, Coimbatore District [TM011458].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.