சாராபோடின் கழுத்து அமைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழும் விலங்குகளை ஒப்பிட்டு மீட்கப்பட்ட திப்ளோதோகசின் தற்போதைய நேர்த்தியான கழுத்தமைவு

சாரோபோடின் கழுத்து அமைவு (Sauropod neck posture) விவாதம் விஞ்ஞானிகளிடையே எப்போதாவது மேற்கொள்ளப்படுகிறது .இவை பழக்கத்தில் இருக்கும் கழுத்தின் கிடைமட்ட அல்லது நிலைக்குத்தான தோற்ற அமைவைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. . ஆராய்ச்சி பகுப்பாய்வுக்கான சான்று விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. இவற்றில் அதன் கழுத்தின் சமனிலை இருப்பியக்கநிலையை மீட்டமைத்தல், அதன் கழுத்தெலும்புகளை ஆய்ந்து கழுத்தின் இயக்க நெடுக்கத்தை மதிப்பிடல், பல இருப்பியக்கநிலைகளில் நீண்ட கழுத்தைப் பேணுவதற்கான ஆற்றல் தேவைகளையும் வளர்சிதைமாற்றயும் மீட்டமமைத்தல், வாழும் விலங்குகளின் கழுத்தமைவை ஒப்பிடுதல் போன்றன அடங்கும்.[1]


உயிரியக்கவியல்[தொகு]

சாராபோடு எலும்புகளும் கழுத்தும் சார்ந்த உயிரியக்கவியல் கழுத்து எந்த கோணத்தில் இருத்திவைக்கப்படுகிறது என்பதை அறிய உதவும்.<[2]

நெகிழ்திறன்[தொகு]

2013 ஆம் ஆண்டில், மத்தேயு ஜே. காபிளே சாராபோட்களின் கழுத்து நெகிழ்திறன் குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவை PLOS ONE இல் வெளியிட்டார். கழுத்துகள் உண்மையில் எவ்வளவு நெகிழ்வுத் தன்மையுடையவை என்பதைத் தெரிந்துகொள்வதற்காக சாரோபோட் பேரினத்துடன் நெருப்புக்கோழியின் கழுத்தை ஒப்பிடுகிறார்கள். முந்தைய உயிரியக்கவியல் ஆய்வுகள், கழுந்து செங்குத்து, மற்றும் கீழ்நோக்கிய சாய்ந்த நிலைக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளன. இந்த ஆய்வின் முடிவில், சாரோபோடின் கழுத்து நெகிழ்திறன் எலும்புத்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது என்று கண்டறிந்தது. அப்படி இருப்பின், முடிவுகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். நெகிழ்தன்மையைக் கட்டுப்படுத்தும் தசைத் திசுக்களின் பற்றாக்குறை இருப்பினும், முன்னர் நினைத்ததைவிட சாரோபோடின் கழுத்து குறைவான நெகிழ்வுடையனவாக இருப்பதாகவே கருதப்பட்டது.[3]

2014 ஆம் ஆண்டில், மைக் பி. டெய்லர் என்பவர் அபோதோசாரசு, திப்ளோதோகசு ஆகியவற்றின் கழுத்துகளின் நெகிழ்திறனை ஆராய்ந்தார். அவர் காபிளேவும் குழுவினரும் குறிப்பிட்டவாறு முதுகெலும்பு வெளிப்படுத்துவது போல் கழுத்து இயல்பான நிலையைக் காட்டிலும் குறைவான நெகிழ்வுடையதாக இருப்பதில்லை என கண்டறிந்தார். காபீளே குழுவினர் குருத்தெலும்பு சேர்க்கப்படாதபோது உண்மையில் கழுத்து மிகவும் குறைவான நெகிழ்திறன் உடையதாக உள்ளதை கண்டறிந்தனர். மூட்டுகளுக்கிடையே உள்ள குருத்தெலும்பு கழுத்தை 90 °அளவுக்குக் கூட நெகிழ வழிவகுக்கிறது. இருப்பினும், டெய்லர், கழுத்து, செங்குத்தாக மேலே வளைய முடியும்போது, எலும்பின் நடுநிலை அமைவு கிடைமட்டத்தின் பொது இருப்பில் சுழன்றிருக்கும். வழக்கம் போல் தலையை மேல் நோக்கித் தூக்கும்போது ஒரு எச்சரிக்கை உணர்வுடன் நிலைக்குத்தாக நிலைநிறுத்தும் எனக் கூறினார்.[4]

தசையிணைவு[தொகு]

அதிக தசையுடைய சாராபோடின் கழுத்து தங்கள் உணவு நிலைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. பிராக்கியோசாரசு பிராங்கை (தற்போது ஜிராபிடைட்டன்) போன்றன உணவைப் பரவலாக தேடுவதால், அது குறைந்த பரவலாக உணவு தேடும் திப்ளோதோகசு, திக்ராசோசாரசு போன்ற மற்ற சாராபோட்களை விட கழுத்துத்தசைகள் திரள்வாகப் பெற்றிருக்கலாம். பிராக்கியோசாரசு பிராங்கையின் சாய்ந்த கழுத்தைச் சமனிலைப்படுத்த நீண்ட வால் மற்றும் கால்கள் சிறப்பாக இருக்க வேண்டும், . எவ்வாறாயினும், சாராபோடுகளின் தசைகளில் வெப்பம் கொள்தன்மை அல்லது வெப்பம் உமிழ் தன்மை எங்ஙனம் முதன்மைப் பங்காற்றுகிறது என்பதே கேள்வி . வெப்பம் கொள் சாராபோடுகளில் குடலும் வயிறும் வெப்பம் உமிழ் சாராபோடுகளை விட பெரிதாக உள்ளது. குறிப்பாக சாராபோடுகள் உணவு உட்கொள்ளும் தன்மையைப் பொறுத்து எந்தளவு குடல் தேவை என்பதையும் அவற்றின் தேவைப்படும் தலை நீட்சியையும் தீர்மானிக்க முடியும், .[5]

இதயமும் வளர்சிதைமாற்ற அழுத்தமும்[தொகு]

சாராபோடு கழுத்தின் நிலைக்குத்தான இருப்புநிலைக்கு மிக உயர்வான குருதியழுத்தமும் இதய வலிமையும் தேவையென ச் சிலர் கருதுகின்றனர். உரோசர் செய்மவுரும் கார்வேஇலில்லிவைட்டும் 2000 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், நிலைக்குத்தான இருப்புநிலை கழுத்தில் தலையைத் தூக்க, 700 மிமீ இதள்(பாதரச) அழுத்தம் தேவைப்படுவதாகக் கண்டறிந்தனர். இது வெப்ப உறிசலுக்குச் சாவிநிலையும் வெப்ப உமிழ்வுக்கு உயர் கேடையும் இதய தசைவலிமை பொதுமானதாக இருக்கும்போதும் தரவல்லதாகும்.[6] செஉமவுர் தனது பிந்தைய ஆய்வில் தலைக்குக் குருதியை ஏற்ற விலங்கின் மொத்தஆற்றலில் பாதியளவுக்குத் தேவைப்படும் எனும் முடிவை அடைந்தார். இது சாராபோடுகள் வ்உயர்பரப்பில் உணவு தேடலைத் தடுத்து, மாறாக தாழ்வான கழுத்தோடு உணவுகொல்ல்வைக்கும்.[7]

மேலுள்ள ஆய்வு கழுத்தில் இதயம் அமையும் கருதுகோளை முற்றிலும் தவிர்க்கிறது.[8] as evolutionarily implausible, assuming arterial valves could have no role without associated musculature.

கருதுகோள்[தொகு]

ஒபிஸ்தோசீலிகார்டியாவின் உண்மை அமைவிலிருந்து பெறப்பட்ட மீள் நிலை(A), [9] ஸ்வார்ட்ஸ் மற்றூம் பலர் 

சாராபோட்களின் கழுத்தமைவு குறித்த மாறுபட்ட கருத்துகளை அலசி ஆராய, சில கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன

கிடைமட்ட அமைவு[தொகு]

கென்ட் ஸ்டீவன்ஸ் மற்றும் மைக்கேல் பாரிஷ் ஆகிய இருவரும் கிடைமட்ட கழுத்தமைவை ஆதரித்தனர். இவர்கள் 1999 ஆம் ஆண்டில் அபட்டோசாரஸ் மற்றும் டிப்ளோடோகஸ் பேரினங்களை அவற்றின் சாய்ந்த கழுத்திற்காக ஆய்வு செய்தனர். சாராபோட்களின் முன்கழுத்து முன்னர் குறிப்பிட்டது போல் குறைந்த நெகிழ்வுத்தன்மை உடையதாய் இன்றி டிப்ளோடோகஸின் கழுத்தெலும்பு அபட்டோசாரசை விட அதிக நெகிழ்வுத்தன்மை உடையதாய் உள்ளது. சாராபோடுகளின் இவ்விரு நிலைகளும் அவை உயரமான தாவரங்களை விட தரையில் உள்ள புற்களையே உண்கின்றன என்பதை உணர்த்துகின்றன.[9] பின்னர் 2005 ஆம் ஆண்டில் ஸ்டீவன்ஸ் மற்றும் பாரிஷ் சாராபோடின் கழுத்து சார்ந்த உயிரியக்கவியலினை இம்முறை ஜுராசிக் பூங்காவில் வாழும் பல்வேறு வகை சாராபோடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.கென்ட் சுட்ஸ்டீவன்சு, மைக்கேல் பாரிழ்சு போன்றோர் குறிப்பாக, அபேட்டோசாரசு, திப்ளோதோகசு, கேமராசாரசு, பிராக்கியோசாரசு, டைகிரியோசாரஸ், செட்டியோசாரசு, இயூகிலோபசு போன்றவற்றில் கிடைமட்ட கழுத்துடையவை என்று குறிப்பிடுகின்றனர். இவற்றில் சிலவற்றின் கழுத்து கீழ் நோக்கி வளைந்து காணப்படும். [10] இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் நிறைய தகவல்கள் இக்கருதுகோளின் படி சரியானவை அல்ல. மைக்கேல் பி.டைலர் குழுவினர் மறைந்த ஊர்வனவற்றின் கழுத்தமைவைச் சாராபோட்களுடன் ஒப்பிட்டு (திப்ளோதோகசின் நில்லைக்குத்தான கழுத்தமைவையும் சேர்த்து) சுட்டீவன்சு, மைக்கேல் பாரிழ்சின் கருதுகோளிலிருந்து மாறுபட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு சாராபோடின் எலும்பின் நடுநிலைத்தன்மையும் இயற்கையான கழுத்து அமைவும் அடிப்படையிலான எண்ணத்தில், சுட்டீவன்சு பாரிழ்சின் கருத்துகள் துல்லியமற்றவையாக உள்ளன. டைலரின் குழுவினர் எலும்பின் நடுநிலைத்தன்மை வழக்கமான நிலையன்றி இரு வேறுபட்ட அமைப்புகளின் நடுநிலையே எனக் குறிப்பிடுகின்றனர்.

சாய்வான நிலை[தொகு]

பொதுவாக கூறுவது போல் சாராபோடின் கழுத்து நேராக இல்லாமல் சாய்வாக உள்ளதை மற்றொரு கருதுகோள் ஏற்கிறது. டேனிய்லா சுவார்ட்சு குழுவினர் தங்களின் தோள்பட்டை, தன்டெலும்பகம் மீதான ஆய்வினை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டனர். (சில சமயங்களில் இவை சாராபோடு பேரினத்தின் இணைந்த தோள்பட்டைத் தண்டகமாகக் கருதப்படுகிறது). முன்னர் சாராபோடின் தோள்பட்டை மூட்டுகள் கணுக்காலின்ன் கிடைமட்டமாக அமைந்திருந்தன.ஆனால் சுவார்ட்சு குழுவினர் இவை கிடைமட்டமாக அமையாமல் 55° முதல் 65° கோணத்தில் அமைந்துள்ளன என குறிப்பிடுகின்றனர். முழுமையாக அமைந்த தோள்பட்டை மூட்டுகள் கொண்ட திப்ளோதோகசு,கேமராசாரசு மற்றும் டைட்டனோசார் ஒபிசுதோசீலிகாடியாவின் எலும்புக்கூட்டினைத் தோள்பட்டை தண்டெலும்பகச் சரியான அமைவுடன் ஆய்ந்தறிந்து மறு வடிவமைப்பு செய்யப்பட்டது .திப்ளோதோகசில் 60° அகன்ற தோள்பட்டைக் கழுத்து சற்று ஏறக்குறைய கிடைமட்டமாக உள்ளதை குறிப்பிடுகிறது. இது கிடைமட்ட அமைவிலிருந்து பெரிதும் வேறுபடவில்லை. ,[11] கில்மோர் ,கண்டறிந்த இளம்  காமராசாரசு தொடக்கத்தில் தோள்ப்பட்டைத் தண்டெலும்பகத்தில் உள்ளது போல் சரியான இடத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால் சுவார்ட்சு குழுவினர்  45° கோணத்தில் உள்ளதாக விமர்சிக்கின்றனர்.சுவார்ட்சு குழுவினர் கண்டறிந்த குறிப்பிட்ட கோணத்திலுள்ள எலும்புக்கூடு ஆசுபார்ன்,மூக்,  யென்ஸன் மறுவடிவமைத்த பேரினத்துடன் ஒத்திருக்கிறது. ஒபிசுதோசீலிகாடியாவில் இரு அமைவுகள் தோள்ப்பட்டைத் தண்டெலும்பகத்தில் உள்ளது போல்  60° கோணத்தில் உள்ளன.கேமராசாரசு போன்று அல்லாமல் ஒபிசுதோசீலிகாடியா மறுவடிவமைப்பை பெற்றுள்ளன.

சில சாராபோடுகளின் நிலைக்குத்தான நிலை[தொகு]

இயூகிலோபசு, பிராக்கியோசாரசு போன்ற ஒரு சில சாராபோடுகளில் பிற சாராபோடுகளில் இல்லாத வகையிலான செங்குத்தான கோணத்தில் கழுத்தமைவைப் பெற்றுள்ளன. பெரும்பாலான ஆய்வுகள் இயூகிலோபசு, பிராக்கியோசாரசில் குருதி அழுத்தமும் ஆற்றல் பயன்பாடும் வாழத் தகுந்தவாறு உள்ளதாக கூறுகின்றன. சாராபோடுகளில் குருதி தலைக்குச் செல்வது அதிகமாக உள்ளது. ஆனால் இவ்விரு பேரினங்களில் பயணத்தின்போது ஆற்றல் சேமிக்கப்படுகிறது. பல்வேறு வளங்களுக்கு பயணிக்கும்போது உயிரியக்கவியல் சான்று நிலைக்குத்தான கழுத்திற்கு ஆதரவாக உள்ளது. செங்குத்தான கழுத்துள்ள நிலையில் 100 மீ (300 அடி) நடக்குமபோதும் நிற்கும்போதும் எவ்வளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தோராயமாக, பாதி அளவு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. நீண்டவிலா எலும்புகள் ஆதாரமாக இருந்து நடக்கும்போது  அவை இயக்கத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. செங்கோணக் கழுத்துடைய சாராபோடுகள் வறட்சி, பஞ்ச காலங்களில்   வாழ்வது சாத்தியமற்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Taylor, M. P.; Wedel, M. J.; Naish, D. (2009). "Head and neck posture in sauropod dinosaurs inferred from extant animals". Acta Palaeontologica Polonica 54 (2): 213–220. doi:10.4202/app.2009.0007. 
  2. Andreas Christian (2010). "Some sauropods raised their necks–evidence for high browsing in Euhelopus zdanskyi". Biology Letters (Royal Society) 6 (6): 823–825. doi:10.1098/rsbl.2010.0359. பப்மெட்:20519198. பப்மெட் சென்ட்ரல்:3001369. http://rsbl.royalsocietypublishing.org/content/early/2010/05/29/rsbl.2010.0359.full. 
  3. Cobley, M. J.; Rayfield, E. J.; Barrett, P. M. (2013). "Inter-Vertebral Flexibility of the Ostrich Neck: Implications for Estimating Sauropod Neck Flexibility". PLoS ONE 8 (8): e72187. doi:10.1371/journal.pone.0072187. பப்மெட்:23967284. 
  4. Taylor, M.P. (2014). "Quantifying the effect of intervertebral cartilage on the neutral posture in the necks of sauropod dinosaurs". PeerJ 2: e712. doi:10.7717/peerj.712. பப்மெட்:25551027. பப்மெட் சென்ட்ரல்:4277489. https://peerj.com/articles/712/. 
  5. Franz, R.; Hummel, J.; Keinzle, E.; Kölle, P.; Gunga, H-C.; Clauss, M. (2009). "Allometry of visceral organs in living amniotes and its implications for sauropod dinosaurs". Proceedings of the Royal Society B: Biological Sciences (Royal Society) 276 (1662): 1731–1736. doi:10.1098/rspb.2008.1735. பப்மெட்:19324837. பப்மெட் சென்ட்ரல்:2660986. http://rspb.royalsocietypublishing.org/content/early/2009/02/21/rspb.2008.1735.full. 
  6. Seymour, R. S.; Lillywhite, H. B. (2000). "Hearts, neck posture and metabolic intensity of sauropod dinosaurs". Proceedings of the Royal Society B: Biological Sciences 267 (1455): 1883–7. doi:10.1098/rspb.2000.1225. பப்மெட்:11052540. 
  7. Seymour, R. S. (2009). "Raising the sauropod neck: It costs more to get less". Biology Letters 5 (3): 317–9. doi:10.1098/rsbl.2009.0096. பப்மெட்:19364714. 
  8. Choy, DS; Altman, P (1992-08-29). "The cardiovascular system of barosaurus: an educated guess". Lancet 340 (8818): 534–6. doi:10.1016/0140-6736(92)91722-k. பப்மெட்:1354287. 
  9. Stevens, K. A. (1999). "Neck Posture and Feeding Habits of Two Jurassic Sauropod Dinosaurs". Science 284 (5415): 798–800. doi:10.1126/science.284.5415.798. பப்மெட்:10221910. 
  10. Stevens, K.A.; Parrish, M.J. (2005). "Neck Posture, Dentition, and Feeding Strategies in Jurassic Sauropod Dinosaurs". In Tidwell, Virginia; Carpenter, Kenneth (eds.). Thunder-lizards: The Sauropodomorph Dinosaurs. Bloomington: Indiana University Press. pp. 212–232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-34542-1.
  11. Schwarz, Daniela; Frey, Eberhard; Meyer, Christian A. (2007). "Novel reconstruction of the orientation of the pectoral girdle in sauropods". The Anatomical Record 290: 32–47. doi:10.1002/ar.20405. பப்மெட்:17441196.