சாகேத் குஷ்வாஹா
சாகேத் குஷ்வாஹா | |
---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1963 கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
சாகேத் குஷ்வாஹா (Saket Kushwaha) என்பவர் இந்தியக் கல்வியாளர் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர் ஆவார். இவர் அருணாச்சல பிரதேசத்தின் ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பீகார் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.
கல்வி[தொகு]
குஷ்வாஹா 1963ஆம் ஆண்டு ஆகத்து 28ஆம் தேதி இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் உள்ள பீம்செனில் பிறந்தார்.[1] இவரது தந்தை, சுரேந்திர சிங் குஷ்வாஹா, பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.[1] இவர் ராஞ்சி பல்கலைக்கழகம், ஜார்கண்ட்[2] மற்றும் மகாத்மா காந்தி காசி வித்யாபீட்ம், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.[3] சாகேத் குஷ்வாஹா விவசாயத்தில் இளநிலை (1983) மற்றும் முதுநிலை (1986) மற்றும் முனைவர் (1992) பட்டங்களை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வு விவசாயப் பொருளாதாரம் குறித்தது.[4]
பணி[தொகு]
குஷ்வாஹா நைஜீரியாவின் கூட்டாச்சிதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், மேலாண்மைப் பள்ளி புலத்தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[5] 2006-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.[5] 2014-ல் இவர் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6][7] இங்கு இவர் 2017 வரை பணியாற்றினார். பின்னர் 2017 முதல் 2018 வரை பனாரசு பல்கலைக்கழக ராஜீவ்காந்தி தெற்கு வளாகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8] From 2017 to 2018 he served as professor-in-charge for Rajiv Gandhi South Campus Banaras Hindu University.[4][9] இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[10]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Vice Chancellor". www.rgu.ac.in. Archived from the original on 11 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "List of Vice-Chancellors". www.ranchiuniversity.ac.in. Ranchi University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
- ↑ "Former vice chancellors MGKVP". Mahatma Gandhi Kashi Vidyapith. Archived from the original on 9 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "Prof. Saket Kushwaha at Banaras Hindu University". new.bhu.ac.in. Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
- ↑ 5.0 5.1 "Faculties: Agricultural Economics". www.bhu.ac.in. Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
- ↑ "Acting VCs for eight Bihar universities". https://www.hindustantimes.com/patna/acting-vcs-for-eight-bihar-universities/story-6jffrO5JwqOwiBQXS346yO.html. பார்த்த நாள்: 12 September 2020.
- ↑ "VCs of LNMU, JP univ likely to be removed". https://timesofindia.indiatimes.com/city/patna/VCs-of-LNMU-JP-univ-likely-to-be-removed/articleshow/45127821.cms. பார்த்த நாள்: 12 September 2020.
- ↑ Kumar, Arun (31 January 2017). "Acting VCs for eight Bihar universities" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/patna/acting-vcs-for-eight-bihar-universities/story-6jffrO5JwqOwiBQXS346yO.html. பார்த்த நாள்: 12 September 2020.
- ↑ Singh, Binay (13 September 2017). "South Campus of BHU will have new facilities" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/varanasi/south-campus-of-bhu-will-have-new-facilities/articleshow/60498804.cms. பார்த்த நாள்: 12 September 2020.
- ↑ "Prof Saket Kushwaha appointed new VC of RGU". https://www.business-standard.com/article/pti-stories/prof-saket-kushwaha-appointed-new-vc-of-rgu-118100200532_1.html. பார்த்த நாள்: 12 September 2020.