சாகுல் ஹமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகுல் ஹமீது
இயற்பெயர்சாகுல் ஹமிது
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1989-1998

சாகுல் ஹமீது (Shahul Hameed, இறப்பு: 1998) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவரது பாடல்கள் பெரும்பாலும் ஏ. ஆர். ரகுமான் இசைத்த தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளன. 1980களில் சாகுல் ஹமீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வந்தார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்தென்றல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் 1989ல் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து தீன் இசை மழை என்ற இஸ்லாமிய இசைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்றார்.[1] திருடா திருடா திரைப்படத்தில் ராசாத்தி என் உசுரு, வண்டிச் சோலை சின்னராசு திரைப்படத்தில் செந்தமிழ் நாட்டு தமிழச்சியே, காதலன் படத்தில் ஊர்வசி ஊர்வசி போன்றவை இவர் பாடிய பாடல்களில் சிலவாகும்,[2]

தமிழ் பாடல்கள்[தொகு]

வருடம் பாடல் திரைப்படம்/ ஆல்பம் உடன் பாடியவர்கள்
1989 "எல்லாப் புகழும் இறைவனுக்கே" தேன் இசை மழை
"எங்கள் அப்துல்"
"நாகூர் சாகுல் அமீத்"
"நாகூர் நகரலும் தூயா"
1993 "உசிலம்பட்டி பெண்குட்டி" ஜென்டில்மேன் சுவர்ணலதா
"மாரி மழை பெய்யாதோ" உழவன் ஜி. வி. பிரகாஷ் குமார் சுஜாதா மோகன்
"ராசாத்தி என் உசுரு" திருடா திருடா
1994 "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" வண்டிச்சோலை சின்ராசு
"ஈச்சம் பழம்" பவித்ரா சித்ரா
"மெட்ராசை சுத்திப் பாக்க போறேன்" மே மாதம் சுவர்ணலதா, ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மனோரமா
"எதுக்கு பொண்டாட்டி" கிழக்குச் சீமையிலே கலா, சுனந்தா
"பச்சை கிளி பாடும்" கருத்தம்மா மின்மிணி
"ஊர்வசி ஊர்வசி" காதலன் ஏ. ஆர். ரகுமான், சுரேஷ் பீட்டர்ஸ்
"பேட்டை ராப்" காதலன் சுரேஷ் பீட்டர்ஸ், தேனி குஞ்சரமாள்
1996 "முத்து முத்து" கிழக்கு முகம் சுஜாதா மோகன்
1998 "வாராயோ தோழி" ஜீன்ஸ் சோனு நிகம், ஹரிணி, சங்கீதா கிரிஷ் (நடிகை)

இறப்பு[தொகு]

இவர் 1998ல் சென்னைக்கு அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kamini Mathai (2009). A.R. Rahman: The Musical Storm. Penguin Books India. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-08371-8.
  2. "Eight Musicians Who Died Too Soon". Silverscreen.in. 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-11-15.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகுல்_ஹமீது&oldid=3992255" இலிருந்து மீள்விக்கப்பட்டது