கோ. புஷ்பலீலா
கோ. புஷ்பலீலா | |
---|---|
முன்னாள் அமைச்சர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1963 (அகவை 60–61) ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | ஐதராபாத்து |
கோண்ட்ரு புஷ்பலீலா (Kondru Pushpaleela) (பிறப்பு 1963) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இப்ராகிம்பட்டினம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1] இவர், பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். இவர், தெலுக்கைத் தாய்மொழியாக கொண்ட மாதிகா சமூகத்தைச் சேர்ந்தவர்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
புஷ்பலீலா, ஐதராபாத்தில் ஒரு தொழிலதிபருக்கு எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். திருமணத்திற்குப் பிறகு இளங்கலைப் படிப்பை முடித்தார். 1992 முதல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1994ல் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 1999ல் இப்ராகிம் பட்டினத்தில் போட்டியிட்டு பதினைந்து ஆண்டுகாலமாக உறுப்பினராக இருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.[3]
பின்னர், பாரத் இராட்டிர சமிதியில் சேர்ந்தார். [4] பின்னர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து கட்சியின் செயலாளராக ஆனார். பின்னர், இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்
சொந்த வாழ்க்கை[தொகு]
கே. புஷ்பலீலா, 1981ல் கோண்ட்ரு ராம்தாசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு சுமன் கோண்ட்ரு மற்றும் சுஷ்மா தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vadde, Babu Mohan renominated; 9 replaced[usurped!] தி இந்து 31 March 2004
- ↑ Reservations based on population mooted தி இந்து 11 June 2007
- ↑ Assurance to small industries Times of India - 23 November 2002
- ↑ Assurance to small industries தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - 23 November 2002