கோ. சாரங்கபாணி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்மாமணி புலவர் கோ. சாரங்கபாணி (18 திசம்பர் 1939 - 20 ஆகத்து 2020), தமிழக எழுத்தாளரும், புலவரும், சமய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவாளரும் ஆவார். இவர் பட்டிமன்றங்களிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகமாகப் பங்கேற்றவர். அருட்கதை நம்பி, முத்தமிழ் வித்தகர், நடிப்பிசை நாவலர், காரையின் கம்பர் என இலக்கிய உலகில் போற்றப்பட்டவர். பைந்தமிழ்ப் பேரவையின் நிறுவனத் தலைவர். இவர் புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது பெற்றவர்.

காரைக்காலில் பிறந்த கோ. சாரங்கபாணி 30 ஆண்டு காலம் புதுச்சேரியில் வசித்து வந்தார் இவரது தகப்பனார் கோவிந்தசாமி பிள்ளை.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கம்ப மகரந்தம்
  • சங்கமம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • பிள்ளைநிலா
  • இதிகாச நதிகள்
  • கம்பன் காட்சி அமுதம்
  • கம்பமேகம்
  • பிதிர் வாக்கியம்
  • கலைஞர் 87-87.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • முத்தமிழ் வித்தகர்
  • நடிப்பிசை நாவலர்
  • அருட்கதை நம்பி
  • தமிழ்மாமணி
  • காரையின் கம்பர்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011